Sonntag, 26. Juni 2011

சிறிலங்காவின் நிகழ்ச்சி நிரலுக்குள் தீபம் தொலைக்காட்சி சென்று கொண்டிருக்கிறதா?

நெருக்கடிமிகுந்த வேளையில் புலம்பெயர்தேசங்களில் புதிய பரிமானத்தோடு விடுதலைப் போராட்டத்தை சர்வதேச ரீதியில் வீச்சாக்க வேண்டியது இன்றைய புலம்பெயர் மக்களின் தலையாய கடமையாகும்.
இதனை நிறைவேற்றுவதற்கு தமிழ் தேசியவாதிகள் மிக மும்முரமாக தமது பணியை ஆற்றிக் கொண்டிருக்கும் இக்கணத்தில் சில தமிழ் ஊடகங்கள் தமிழீழத் தேசியச் செயற்பாட்டுக்குக் குந்தகம் விளைவிக்க கூடியவகையிலும், எதிர்மாறான கருத்துருவாக்கங்களை ஏற்படுத்தக் கூடியதுமான நிகழ்ச்சிகளை நடாத்தி தமிழ் உணர்வாளர்களின் மனங்களை காயப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பது இந்நிறுவனங்களுக்கு ஆரோக்கியமானதல்ல.

கடந்த சில மாதங்களாக தமிழீழத் தேசியத்திற்கு விரோதமான அல்லது குந்தகம் விளைவிக்க கூடியதும்,எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை இழிவுபடுத்தி மாவீரர்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் தீபம் தொலைக்காட்சி சேவையில் திரு.அனஸ்ந அவர்களின் “கேள்விநேரம்” நிகழ்ச்சி அமைந்து காணப்படுவதையிட்டு ஈழமக்கள் அதிருப்தியும், ஆத்திரமும் கொண்டுள்ளனர் என்பது யதார்த்தம்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எமது மக்கள் கொடுத்தவிலை மிக மிக அதிகம். தமிழீழத் தேசியக்கொடியைத் தாங்கி அந்தக் கொடியின் கீழ் எமது உன்னத இலட்சியத்திற்காக வீழ்ந்த 40,000 மேற்பட்ட மாவீரர்களின் தியாகங்களை மறந்து தமிழீழத் தேசியக்கொடி தேவைதானா என்ற கேள்வி எழுவதே பச்சைத் துரோகம். அப்படியிருக்கையில் தீபம் ரீவி நிகழ்ச்சியில் தேசியக்கொடியை நாம் பயன்படுத்த வேண்டுமா என்ற கேள்வி நேர விவாத நிகழ்ச்சியை தேசவிரோதக் கும்பலைச் (கொன்சென்ரைன், சங்கர்) சேர்ந்தவர்களை அழைத்து ஓரணியில் இவர்களையும், மறு அணியில் விடையமறியாதவரையும் இருத்தி இரண்டு அணிகளாக வைத்து நடாத்துவதை என்னவென்று சொல்ல?

இந்த நிகழ்ச்சியில் பங்குபற்றிய தேசவிரோதக் கும்பலைச் சேர்ந்த குட்டி எனப்படும் சங்கர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நியூமோல்டன் பகுதியில் நடமாடியதைக் கண்ணுற்ற ஒரு தேசிய உணர்வாளர் அவரை அணுகி இதுபற்றி விவாதித்தபோது சங்கர் அவர்கள் மாவீரர்களைக் கொச்சைப்படுத்தும் விதமாக தகாத வார்த்தைகளைப் பிரயோகித்தமையால் அங்கு குழுமிய ஈழமக்கள் ஆத்திரமுற்று அவரை நையப்புடைத்ததாக லண்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இச்சம்பவத்தையடுத்து தீபம் தொலைக்காட்சியின் அனுசரனையுடன் இலங்கை தூதரகத்தின் ஏற்பாட்டில் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் சில சிங்கள இனவாதிகளும் தேசவிரோதக் கும்பலைச் சேர்ந்தவர்களும் கொன்சென்ரைன் தலைமையில் தமிழீழத் தேசியச் செயற்பாடுகளை முடக்கும் நோக்குடனான துண்டுப்பிரசுர விநியோக விளம்பரத்தை இன்று (26.06.11) மேற்கொண்டிருப்பது புலம்பெயர் மக்களை உணர்வுகளை சீண்டிப்பார்க்கும் நடவடிக்கையாகவே பார்க்க முடிகின்றது.

ஒரு தனிநபர் செய்கின்ற தவறுகள் நிறுவனத்தைச் சார்ந்ததல்லத்தான். ஆனால் ஊடகத்தினூடாக தனிநபர் செய்கின்ற தேசியவிரோதக் கருத்துக்களை ஆதரிப்பதும், அதற்காக வக்காளத்து வாங்குவதும் நிறுவனம் தன்னுடைய எண்ணக்கருத்துக்களையே தனிநபர் என்ற போர்வையில் வெளியிடுகின்றதா? என்ற கேள்வி எழுவது நியாயமானதே.

மேலும் இலங்கைப் பொருட்களை பகீஸ்கரிக்கும்படி அக்ற்நவ் (ஆCT ணோW) அமைப்பும், புலம்பெயர் இளையோர் அமைப்பும், மக்களும் இதற்காகவே தனியான போராட்டங்களை நடாத்திக்கொண்டிருக்கும் இந்த வேளையில் இலங்கையரசின் யடலொக் நிறுவனத்தின் தொலைபேசி இணைப்புக்களை விஸ் மொபைல் (Vஇழ்ழ் Mஒபிலெ) என்ற பெயரில் புலம்பெயர் தேசங்களில் வழங்கும் விநியோகிஸ்தர்களாக தீபம் தொலைக்காட்சி நிறுவனம் இருப்பது தமிழீழத் தேசியமக்களின் தேசிய அபிலாசைகளுக்கு புறம்பானதாக அமைந்து காணப்படுகின்றது. எனவே இவ்விடயங்கள் சார்பாக தீபம் ரீவி நிறுவனத்திடம் கேள்வி கேட்க வேண்டிய பொறுப்பு புலம்பெயர் மக்களிடம் உள்ளது. அதேபோல இதற்கான விளக்கத்தை தீபம் தொலைக்காட்சி  நிறுவனம் தருமா???? மக்களே சிந்தியுங்கள், செயற்படுங்கள்.
உயர்வு தளத்துக்கு வந்த மின்னஞ்சலையே மேலே இணைத்துள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.




  • மேலதிக செய்திகளுக்காக
  • 1 Kommentare:

    Anonym hat gesagt…

    ஈழத்தமிழர் அழிவுக்கு கொலைவெறி சிங்களவனுக்கு மேல் உழைத்தவர்கள் காட்டிக்கொடுக்கும் கீழ்தர தமிழர்களே. இவர்களை இனம் கண்டு ஒதுக்குவ தமிழர்களின் முதற் கடமை.

    Kommentar veröffentlichen