பிரித்தானிய பிரிஸ்ரல் மைதானத்தில் இன்று நடைபெறும் இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிக்கு எதிராக தமிழ் இளையோர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஆளும் மஹிந்த அரசாங்கத்தின் மாத்தறை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினராக உள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூரிய, இன்று சனிக்கிழமை பிரித்தானியா பிரிஸ்ரலில் நடக்கும் ஆட்டத்தில் இலங்கை அணியில் இணைந்து கொள்கிறார்.
Embed
" type="text">
இதனைக் கடுமையாக எதிர்த்து தமிழ் இளையோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவ்வார்ப்பாட்டத்தின் போது தமிழ் இளையோரினால் துண்டுப் பிரசுரமும் விநியோகிக்கப்பட்டுள்ளது.
இத் துண்டு பிரசுரத்தினை மக்கள் ஆர்வத்துடன் பார்த்து தங்களது உணர்வினையும் வெளிபடுதியுள்ளனர்.
சனல் 4 தொலைக்காட்சியில் வெளியான கொலைக்களத்தை தாம் பார்த்து அதிர்ந்து போனதாகவும் அதில் இறந்த, பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்கு தமது அனுதாபத்தினை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்தனர்.
தொடர்ந்தும் இப்படியான அழுத்தங்களினால் சர்வதேசத்தின் முன் சிங்கள அரசின் உண்மையான முகத்தினை வெளிகாட்ட முடியும் என இளையோர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்தும் இவ்வெதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் மக்களின் ஆதரவை வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
RSS Feed
Twitter



Sonntag, Juni 26, 2011
வானதி



0 Kommentare:
Kommentar veröffentlichen