செக்ஸ் முறைகேடு, ஆன்மீக மோசடி உள்ளிட்ட பல குற்றங்களில் தொடர்புடைய போலிச்சாமியார் நித்யானந்தன் சற்று நேரத்துக்கு முன் கைது செய்யப்பட்டார்.
கிட்டத்தட்ட இரண்டு மாத காலம் தலைமறைவாக இருந்தபடி தினம் ஒரு பொய், விளக்கம் என்று பேட்டிகள் கொடுத்து வந்த அவரை, இமாச்சலப் பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர் போலீசார்.
--
நன்றி
தமிழினி
--சோலன் என்ற இடத்தில் பதுங்கியிருந்த நித்யானந்தனை கர்நாடக- இமாச்சலப் போலீசார் இணைந்தே கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நித்யானந்தன் பெங்களூர் கொண்டு வரப்படுகிறார்.
ரஞ்சிதாவையும் கைது செய்ய போலீசார் தேடி வருகின்றனர். அவர் சமீபத்தில்தான் ராவணன் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். கேரளாவில் தங்கியிருக்கக் கூடும் என்பதால் அங்கு அவரைத் தேடி வருகின்றனர்.
நித்யானந்தன் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அனைத்து வழக்குகளும் பெங்களூருக்கு மாற்றப்பட்டுள்ளன. அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடி வாரண்டும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே கடந்த சில நாட்களாக பெங்களூர் பிடதி ஆசிரமத்தில் கர்நாடக சிஐடி போலீசார் மேற்கொண்ட சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கியுள்ளன. இவற்றின் அடிப்படையிலும் நித்யானந்தன் மீது புதிய வழக்குகள் பதிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.
--
நன்றி
தமிழினி
RSS Feed
Twitter



Mittwoch, April 21, 2010
வானதி




0 Kommentare:
Kommentar veröffentlichen