Donnerstag, 14. April 2011

எஸ்.வி. சேகர் - கராத்தே தியாகராஜன் மற்றும் பலர் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கம்: தங்கபாலு


காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் தங்கபாலுக்கு எதிர்ப்புகள் கிளம்பின.
மயிலாப்பூர் தொகுதியில் அவர் போட்டியிடுவதை கண்டித்தும் போராட்டங்கள் நடந்தன. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வமான வேட்பாளர்களுக்கு எதிராகவும் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாகவும் நடந்து கொண்டதாக 19 பேரை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்குவதாக தங்கபாலு அறிவித்துள்ளார்.

நீக்கப்பட்டவர்கள் விவரம் வருமாறு:- முன்னாள் துணைமேயர் கராத்தே தியாகராஜன், நடிகர் எஸ்.வி. சேகர், மா.முத்துசாமி, கவுன்சிலர்கள் மங்களராஜ், செங்கை செல்லப்பன், சாந்தி சம்பந்தம், இளைஞர் காங்கிரசை சேர்ந்த டி. விஜயசேகர், ஜேம்ஸ் ஜி. பிரகாஷ், ரஞ்சன்குமார், ஆர்.வி. ரஞ்சித்குமார், ஜே. சுரேஷ், சக்திவேல், ஜவகர் பாபு, மாணவர் காங்கிரசை சேர்ந்த கமல், பவன் குமார், பட்டுக்கோட்டையை சேர்ந்த ஏ.ஆர்.எம். கோவிந்த ராஜன், எஸ். திருஞானம், கே.ஆர். நாடிமுத்து, வில்லிவாக்கம் சாந்தகுமார்.

காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் இவர்களுடன் கட்சி ரீதியாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று தங்கபாலு கூறியுள்ளார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எஸ்.வி. சேகரும், கராத்தே தியாகராஜனும் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட டிக்கெட் கேட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தங்கபாலு மனைவிக்கு அங்கு சீட் கிடைத்தது. பிறகு அவரது வேட்பு மனு தள்ளுபடியானதால் மாற்று வேட்பாளராக வேட்பு மனுதாக்கல் செய்து இருந்த தங்கபாலு அதிகாரப்பூர்வ வேட்பாளரானார்.

காங்கிரசில் இருந்து நீக்க தங்கபாலுக்கு அதிகாரம் இல்லை என்று எஸ்.வி. சேகரும், கராத்தே தியாகராஜனும் அறிவித்து உள்ளனர்.

  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen