விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக் கட்டத்தில் மனிதஉரிமைகளை மீறியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் ஒருபோதும் கவலைப்படப் போவதில்லை என்று கூறியுள்ளார் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.
சிறிலங்காவின் அரச ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது அரசபடைகள் மனிதஉரிமை சட்டங்களுக்கு அமையவே செயற்பட்டிருந்தனர்.
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் எதையும் சிறிலங்கா அரசாங்கம் மறைக்கவில்லை.
நாட்டை மீளக்கட்டியெழுப்புதல், புலிகளின் நிர்வாகத்தின் கீழ் இருந்து பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வசதிகளைச் செய்து கொடுத்தல் என்று சிறிலங்கா அரசுக்கு பல்வேறு முக்கிய வேலைகள் உள்ளன.
இந்தநிலையில் அனைத்துலக மனிதஉரிமை அமைப்புகளின் பொய்யான குற்றச்சாட்டுகள் அடங்கிய அறிக்கைகளைப் படித்துக் கொண்டிருக்க எனக்கு நேரமில்லை.
இது போன்ற அறிக்கைகள் காலத்துக்குக் காலம் வருவது தான்" என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
Freitag, 15. April 2011
பொய்க் குற்றச்சாட்டு அறிக்கைகளைப் படிக்க நேரமில்லை - கோத்தாபய ராஜபக்ச


0 Kommentare:
Kommentar veröffentlichen