தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாவின் ஈமச் சாம்பல் வீர முழக்கம் விண்ணை முட்ட கடலோடு கரைக்கும் நிகழ்வு நேற்று பழ நெடுமாறன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது.
அமரர் பார்வதி அம்பாளின் 31ஆவது நினைவு நாளை ஒட்டி அன்னையாரின் ஈமச்சாம்பலை, மலர் தூவி கடலில் கலக்கும் நிகழ்வு நேற்று மாலை 6 மணியளவில் சென்னை கண்ணகி சிலை எதிரில் உள்ள கடற்கரையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்குத் தலைமையேற்றிருந்தார் ஐயா பழ நெடுமாறன். வைகோ, காசியானந்தன்ன,நடராசன் தியாகு உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும், மன்சூரலிகான், கௌதமன் உட்பட திரையுலகப் பிரபலங்களும் இதில் கலந்து கொண்டனர்.
நாம் தமிழர் உட்பட பல்வேறு அரசியல் கட்சியைச் சார்ந்த பல்லாயிரக் கணக்கான தொண்டர்களும் இதில் கலந்து கொண்டு அன்னைக்கு வீர வணக்க அஞ்சலி செலுத்தினர்.
மாலை 5.30 மணிக்கு தாயாரின் ஈமச் சாம்பலுடன் நெடுமாறன் வைகோ ஆகியோர் கண்ணகி சிலைக்கு வந்து சேர்ந்தவுடன் அங்கு கூடியிருந்தோரின் வீரமுழக்கம் கடற்கரை எங்கும் எட்டு திக்கும் எதிரொலித்தது.
அங்கிருந்து ஐயா நெடுமாறன் அன்னையின் ஈமச் சாம்பலை ஏந்தி வர சிறிது தூரத்திற்கு பிறகு அவரிடம் இருந்து வைகோ பெற்று கொண்டார். அரை மணி நேர நடை பயணத்திற்கு பிறகு வங்கக் கடலில் வீரமுழக்கம் விண்ணை முட்ட தாயாரின் ஈமச் சாம்பல் மலர் தூவி கடலில் கரைக்கப்பட்டது.
Mittwoch, 23. März 2011
அன்னை பார்வதி அம்மாளின் ஈமச் சாம்பல் கடலோடு சங்கமம்! (வீடியோ இணைப்பு)


0 Kommentare:
Kommentar veröffentlichen