காவலன் படத்தால் தியேட்டர் உரிமையாளர்கள் - விநியோகஸ்தர்கள் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.
நடிகர் விஜய் நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் 'காவலன்'. பொங்கலன்று வெளிவர இருக்கிறது. இதனை அடுத்து திருச்சியில் அவசரமாக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினரின் கூட்டம் நடைபெற்றது. சுறா படத்தின் தோல்விக்கு விஜய் பணம் கொடுக்காததால் காவலன் படத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க போவதில்லை என்று அறிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாது, அப்படத்தின் பைனான்சியர்களும் தாங்கள் அளித்த பணத்துக்கு இன்னும் செட்டில் செய்யவில்லை என்று தகவலும் வெளியாகியுள்ளது.
இதன் இடையே விநியோகஸ்தர் சங்க தலைவர் கலைப்புலி ஜி.சேகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், 'தமிழ் திரைப்பட தொழிலில் பிரச்னைகளை தோற்றுவிக்கும் விதமாக திருச்சியில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கொடுத்த அறிக்கையை தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. தொழில் என்றால் நஷ்டமும் உண்டு. லாபமும் உண்டு. யாரையும் கட்டாயப்படுத்தி பொருளை விற்க முடியாது. அப்படி விற்றால் அது வியாபாரமாகாது. இஷ்டப்பட்டுத்தான் வியாபாரங்கள் நடக்கின்றன. லாபம் எனக்கு. நஷ்டம் உனக்கு என்று கோரிக்கை வைப்பது தொழில் அடிப்படையை தகர்க்கும் செயல்.
தயாரிப்பாளர்கள் படத்தை எம்.ஜி. முறையிலோ அவுட்ரேட் முறையிலோ வாங்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தி விற்க முடியாது. விநியோகஸ்தர்களும் அதே முறையில் வாங்கும்படி தியேட்டர் உரிமையாளர்களை மிரட்டுவது இல்லை. நஷ்டம் ஏற்பட்டதாக தியேட்டர் உரிமையாளர்கள் பணத்தை திருப்பி கேட்பதுபோல் ரசிகர்களும் படம் பிடிக்கவில்லை என பணத்தை திருப்பிக்கேட்டால் நீங்கள் கொடுப்பீர்களா? காவலன் திரைப்படம் வாயிலாக எங்கள் விநியோகஸ்தர் ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கு எதிரான முரண்பாடான அறிக்கை கொடுப்பதை இனியும் நாங்கள் பொறுக்க முடியாது.
திரைப்பட புகைவண்டி தடம் புரளாமல் ஓட துணை புரிய வேண்டுமேயின்றி தடம் புரள காரணமாக இருக்கக்கூடாது என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்," என்று அவர் கூறியுள்ளார்.
காவலன் படத்தின் மூலம் தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் இடையே பிரச்னை ஏற்பட்டு உள்ள நிலையில், பொங்கல் அன்று காவலன் வெளிவருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதேவேளையில், நடிகர் விஜய் தனது வேலாயுதம் படத்தில் பிஸியாக இருக்கிறார்.
விஜய் ரசிகர்களுக்கு பொங்கல் வைக்க காவலன் வருவரா?
RSS Feed
Twitter



Montag, Januar 10, 2011
வானதி




0 Kommentare:
Kommentar veröffentlichen