புத்தாண்டு தினத்தில் உரும்பிராயில் ஒருவர் காணமற்போயுள்ளார் என கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, சிவகுல வீதி, உரும்பிராய் மேற்கு, உரும்பிராயைச் சேர்ந்த ஓட்டோ சாரதியான சோதிநாதன் கோபிநாத் (வயது – 27),என்பவரே நேற்று காணமற் போய்யுள்ளார் என கோப்பாய் பொலிஸில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
புத்தாண்டு தினத்தன்று அதிகாலை 7.30 மணியளவில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும்,அதனைத் தொடர்ந்து தனக்கு ஒரு HIRE வந்திருப்பதாகவும், உடனே போய்ட்டு வருவதாகவும் கூறிய கோபிநாத் இன்றுவரை வீடு திரும்பவில்லை. கோபிநாத் வீடு திரும்பாததை அடுத்து, அவரது மனைவி இன்று கிராம அலுவலரின் கவனத்திற்கு கொண்டு வந்ததை தொடர்ந்து, கிராம அலுவலரின் அறிவுறுத்தலிற்கமைய தனது கணவர் காணமற் போயுள்ளார் என கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளார் என எமது யாழ் செய்தியாளர் தெரிவித்தார். கோபிநாத் ஒரு பிள்ளையின் தந்தையாவார்.
0 Kommentare:
Kommentar veröffentlichen