லண்டனுக்குச் சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கைது செய்யும் பிரித்தானிய தமிழ் மக்களின் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.பிரித்தானிய சட்டங்களுக்கமைய ஜனாதிபதி காப்பாற்றப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பிரிட்டன் வாழ் தமிழர் பேரவை அமைப்பின் பிரதிநிதியயாருவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று அதிகாலை பிரித்தானியாவின் விமானநிலையத்தை சென்றடைந்தார். இவர் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றுவதற்காகவே அவர் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த இறுதிக்கட்டப் போரின் போது தமிழ் மக்கள் மீது பல விதமாக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் திணிக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்காக தமிழ் மக்களின் உயிர்களைக் காவுகொண்ட ஒரு ஜனாதிபதி பிரிட்டனுக்குள் நுழையவிடக்கூடாது என்ற வெளிப்பாட்டுடன் பிரித்தானிய வாழ் தமிழ் மக்கள் ஒன்றுகூடி ஜனாதிபதிக்கெதிராக ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் பின்னணியில் பிரிட்டன் நாட்டுச் சட்டத்திற்கு அமைய ஜனாதிபதியை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.தமது ஆர்ப்பாட்டங்கள் மூலமாவது ஜனாதிபதி மகிந்த ராஜபக்வின் செயற்பாடுகளை உலகறிய செய்து சர்வதேச ரீதியில் அவமரியாதையை பரிசாக வழங்கி வைப்போமென பிரிட்டன் வாழ் தமிழர் பேரவை அமைப்பினர் தெரிவித்துள்ளனர். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,தமிழர்களைப் பொறுத்தவரையில் தமிழீழம் என்பது தன்மானக் கொள்கை. இவற்றை வற்புறுத்தி இப்போராட்ட ரீதியான முன்னெடுப் புக்களை விடுதலைப்புலிகள் மேற்கொண்டனர்.
இலங்கை அரசு சர்வதேச நாடுகளிடம் அவர்களைப் பயங்கரவாதிகளாக காட்டிக்கொண்டு சிறுபான் மையினரான தமிழர்களை ஒடுக்குவதற்கு முயற்சிக்கின்றது.இந்த நடவடிக்கைகளை மழுங்கடிக்கும் முகமாக நாம் எமது எதிர் பினைகளை வெளிக்காட்டி சிறந்த பரிசினை வழங்கவோம். ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கு பொலிஸார் தமது அனுமதியினை வழங்கியுள்ளனர். நாளையதினம் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றும்போது பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளோம் இதற்கான பிரசார நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டு லண்டன் நகரமெங்கும் துண்டுப்பிரசுரங்களும் விநியோ கிக்கப்பட்டுள்ளது.
இவ்வார்பாட்டங்களுக்கு பிரித்தானியாவில் வாழ்கின்ற முஸ்லிம், சிங்கள மக்களும் தமது ஆதரவினை வழங்குவதற்கு முன் வந்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
0 Kommentare:
Kommentar veröffentlichen