தமிழின அழிப்பை முன்னின்று நடத்திய கொலை வெறியன் மகிந்த ராஜபக்க்ஷ அவர்கள் நேற்று முந்தினம் பிரித்தானியாவுக்கு வந்துள்ளார்.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நாளை மகிந்த அவர்கள் உரையாற்றவுள்ள நிலையில் அங்கு பல ஆயிரம் பிரித்தானிய தமிழ் மக்கள் உட்பட ஜரோப்பிய மக்களும் பங்கு கொண்டு மகிந்த ராஜபக்க்ஷ அவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை நடத்துமாறு ஈழதேசம் இணையம் அன்போடும் உரிமையோடும் தமிழ் மக்களை கேட்டுக்கொள்கிறது.
இதே சமயம் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் முன்பாக நடைபெறவுள்ள போராட்டத்தை ஒத்ததாக உலகில் உள்ள அனைத்து பிரித்தானிய தூதரகங்களையும் மக்கள் முற்றுகையிட்டு பிரித்தானியாவுக்கு வந்துள்ள போர் குற்றவாளி மகிந்தவை கைது செய்யுமாறு போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று பொது மக்களையும் இதுவரை காலமும் இது போன்ற போராட்டங்களை வெற்றிகரமாக நடத்திய அமைப்புக்களையும் ஈழதேசம் கேட்டுக்கொள்கிறது.
Warcrime @ Yahoo! Video
RSS Feed
Twitter



Mittwoch, Dezember 01, 2010
வானதி



0 Kommentare:
Kommentar veröffentlichen