Mittwoch, 1. Dezember 2010

மகிந்தவை சிறைபிடிக்கும் மாணவர் குழுவின் வேண்டுகோள் !


ஐரோப்பிய தமிழர்களே !

ரத்த வெறியன் ராஜபக்சே இங்கே வந்து எங்கள் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டுகிறான். மூன்று லட்சம்தமிழர் வாழும் நாட்டில் நேற்று போதுமான மக்கள் வராத காரணத்தால் ஹீத்ரோ விமான நிலையத்தை சுற்றி வளைக்க முடியவில்லை .


பிரித்தானிய போலீசார் திடாமிட்ட முறையில் மக்களை ஒரு பக்கம் கத்த அனுமதித்து விட்டு சர்வ சாதரணமாக ஒரு தனி வாகனத்தில் மகிந்தவை ஏற்றி சென்று

ஹட்டன் குரோஸ் கார் தரிப்பிடத்தில் வைத்து வேறு வாகனத்துக்கு மாற்றி கொண்டு சென்றுவிட்டனர். நாங்கள் பெருமளவில் இணைந்து இருந்தால் முற்று முழுதாக சுற்றி வளைத்து ஒரு பலத்தை காட்டி இருக்கலாம். இதற்கு முடிவு வைப்போம் ! தமிழன் தோற்றான் என்று இருக்க வேண்டாம் இனியும் !
போதமான நேரமும் பலமும் உள்ள நாங்கள் இணைவதற்கு உங்கள் தமிழ் அமைப்புகளை பெரியளவில் வாகன ஏற்பாடுகளை செய்ய சொல்லுங்கள் !. காலையிலேயே வந்து விடுங்கள் ! கடைசி நேரத்தில் பாதைகளை மூடி குள்ளத்தனம் கொண்ட போலீசார் வேறு திட்டத்துடன் இருப்பார்.

இன்று ஒக்ஸ்போர்ட் பொலிசாரும் சிறி லங்கா அதிகாரிகளும் பெரும் திட்டம் ஒன்றை தீட்டு இதை எப்படியும் நடாத்துவது என்று தீர்மானித்து உள்ளனர் ! பிரதானிய அரசும் மகிந்தவுக்கு சகல பாதுகாப்பையும் தர முன்வந்து உள்ளது !

இதை உடைக்க நாங்கள் பெருமளவில் இணைய வேண்டும் !தேவைபட்டால் அரங்கத்தின் உள்ளே பலாதகரமாக நுழையவும் முயற்சி செய்வோம் ! இது மக்கள் போர் ! பெருமளவில் நாங்கள் வந்தால் நிச்சயம் செய்யலாம் !

மகிந்தவின் பேச்சை குழப்பினால் அது எங்கள் வெற்றியே ! டிசம்பர் 02 ஆம் நாளை வரலாற்றில் பொறிக்கப்படும் நாளாக மாற்றுவோம் .

தமிழ் இளையோர் அமைப்பினர் பெரும் பங்களிக்க வேண்டி நிற்கிறோம். பல்கலை கழக மாணவர்கள் முக்கியமாக இந்த வரலாற்று நிகழ்வை நடாத்தி முடிக்க திட சங்கற்பம் செய்துள்ளோம்.


உங்கள் நாட்டு அமைப்புகளை தொடர்பு கொண்டு உடனடியாக இதை ஒரு சவாலாக என்று தமிழனின் வரலாற்றை மாற்ற முன் வரவேண்டும் !

அக குறைந்தது ஐம்பதினாயிரம் தமிழர் இணைய வேண்டும். அதனால்சகல ஐரோப்பிய தமிழ் இளையோர் அமைப்புகளும் உடனடியாக பிரித்தானிய பயணத்தை தயார் செயுமாறு கேட்டு கொள்கிறோம் !



தமிழர் அமைபுகள அனைத்தும் இணைந்து பயண ஒழுங்குகளை செய்து தருமாறு அறைகூவல் விடுக்கிறோம் !







தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் !







நன்றி !







மகிந்தவை சிறைபிடிக்கும் மாணவர் குழு
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen