Mittwoch, 1. Dezember 2010

சித்திரவதைக்குட்பட்ட பெண்களுள் இசைப்பிரியாவும் அடக்கம் - தமிழ்நெட்


சிங்கள இராணுவம் விடுதலைப்புலிகள் மீது மேற்கொண்ட யுத்தத்தின் போது செய்த அட்டூழியங்கள், சித்திரவதைகளை சனல்4 செய்திகள் காணொளி வடிவில் வெளியிட்டு வருகின்றன.

அந்த வகையில் நேற்று வெளியிட்ட காணொளியில் சிங்கள இராணுவம் தமிழீழப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து சுட்டுத்தள்ளும் காட்சிகள் அடங்கிய போர்க்குற்ற காணொளியை வெளியிட்டிருந்தது.

அக்காணொளியில் பெண்விடுதலைப்புலி உறுப்பினரும், விடுதலைப்புலிகளினால் நடாத்தப்பட்டு வந்த "ஒளிவீச்சு" க்கு செய்தியாளராக இருந்தவருமான இசைப்பிரியாவும் உள்ளடங்குவதாக தமிழ்நெட் செய்தி தெரிவித்திருக்கின்றது.



அந்தவகையில் நேற்று சனல்4 இல் புதிதாக வெளியிடப்பட்டுள்ள காட்சிகளில் நிர்வாணமாக ஏழு பெண்கள் இறந்து கிடக்கும் காட்சிகள் காணப்படுகின்றன. இவற்றுக்கருகில் நின்று உரையாடுபவர்களின் உரையாடல்களிலிருந்து இந்தப் பெண்கள் கொல்லப்படுவதற்கு முன் கற்பழிக்கப்பட்டுள்ளார்கள் என்ற முடிவுக்கு வரக்கூடியதாக இருக்கின்றது.

சனல் - 4 விரிவாக இந்தக் காட்சிகளை ஒளிபரப்பிய போதிலும் ஒரு கட்டத்தில் அதற்கு மேல் காட்சிகள் ஒளிபரப்பமுடியாத அளவுக்கு காட்சிகள் கொடூரமாக இருக்கின்றன. பெண்கள் சுட்டுக் கொல்லப்படுவது, பெண்களின் நிர்வாண உடம்புகள், மற்றும் சூழ நின்று கொண்டிருப்பவர்களின் மோசமான வார்த்தைப் பிரயோகங்கள் உள்ளடங்கிய உரையாடல்கள் என்பன காரணமாக தொடர்ந்து ஒளிபரப்ப முடியவில்லை என்று சனல் 4 செய்தி அறிவிப்பாளர்கள் கூறினர்.

இருப்பினும் அக்காணொளியை ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைக் குழுவுக்கு சனல் 4 அனுப்பிவைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.



காணொளி இணைக்கப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு - காணொளி மிகவும் கொடூரமானது. காணொளி, புகைப்படங்கள் எல்லோர் மனதையும் புண்படுத்தும். அதற்காக மன்னிப்புக்கேட்பதோடு, இப்போர்க்குற்றங்களை ஊடகங்களின் ஊடாகவே வெளிநாட்டு அமைப்புக்களுக்கு தெரியப்படுத்த முடியும் என்பதற்காக வெளியிடப்பட்டுள்ளது என்பதை தெரியப்படுத்துகின்றோம்.


  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen