Montag, 5. Juli 2010

தமிழ்நாட்டில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கடந்த மாதம் வெள்ளைப்புலி 3 குட்டிகள் போட்டது. நேற்று சிங்கம் 2 குட்டிகளை போட்டது.












இந்நிலையில் இன்று தமிழக வனத்துறை அமைச்சர் செல்வராஜ் வண்டலூருக்கு வந்தார். பூங்காவை பார்வையிட்ட பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.





அப்போது, ‘’வண்டலூர் உயிரியல் பூங்காவில் மொத்தம் 1,345 வகையான விலங்கு, பறவைகள் உள்ளன. இவை சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.





இந்தியா முழுவதும் 100 வெள்ளைப்புலிகளே இருக்கின்றன.



இவை காடுகளில் இருப்பதற்கான சூழ்நிலை இல்லாததால் பூங்காக்களில் வளர்கிறது.



நாடு முழுவதும் புலிகளின் எண்ணிக்கை 4,100-ல் இருந்து 1,411 ஆக குறைந்து விட்டதாக மத்திய வனத்துறையினர் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.





ஆனால் தமிழ்நாட்டில் தற்போது புலிகளின் எண்ணிக்கை 66-ல் இருந்து 74 ஆக உயர்ந்து இருக்கிறது. இதற்காக மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது ’’என்று கூறினார்.
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen