உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகளின் காலிறுதியில் பிரேசில் அணியை எதிர்த்தாடிய நெதர்லாந்து அணி ஆச்சரியப்படத்தக்க விதத்தில் 2-1 கோல்கள் என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
போட்டியின் 10ஆவது நிமிடம் முதலே ரொபின் ஹோ போட்ட கோலின் மூலம் 1-0 கோல்கள் என்ற கணக்கில் ஆதிக்கம் செலுத்திவந்த பிரேசில் அணி, 53 ஆவது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் ஃபெலிப்பே மேலோ போட்ட கோலைத் தொடர்ந்து சமநிலையைத் தக்கவைக்க பெரிதும் சிரமப்பட்டது.
எனினும் பின்னர் 68ஆவது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் ஸ்நெய்டர் போட்ட இரண்டாவது கோலைத் தொடர்ந்து நெதர்லாந்து அணி 2-1 கோல்கள் என்ற கணக்கில் போட்டியில் ஆதிக்கம் செலுத்தியது.
இறுதிவரை நிலைமையை தக்கவைத்துக்கொண்ட நெதர்லாந்து அணி போட்டியில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
RSS Feed
Twitter



Freitag, Juli 02, 2010
வானதி




0 Kommentare:
Kommentar veröffentlichen