
சென்ற வருடம் விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் அரச படைகள், புலிகள் என்று இரு தரப்பினரும் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்படும் கொலைகள் பற்றிய தனது விசாரணைகளை ஐ.நா. நிறுத்திவிட வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோருகின்றனர்.
இலங்கை தொடர்பில் தனக்கு ஆலோசனை வழங்க நிபுணர் குழுவொன்றை ஐ.நாவின் தலைமைச் செயலர் பான் கீ மூன் சென்ற மாதம் அறிவித்திருந்தார். ஆனால் இந்த விசாரணைகளை 'விரும்பத்தகாத தலையீடு' என்று கூறி, அவற்றுக்கு ஒத்துழைக்க இலங்கை மறுத்துள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பியதோடு, பான் கீ மூனின் கொடும்பாவியையும் எரித்தனர். ஐ.நா. ஊழியர்கள் அலுவலகக் கட்டிடங்களிலிருந்து வெளியேறுவதை அவர்கள் தடுத்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டங்களை முன்னின்று நடத்திய அமைச்சர் விமல் வீரவன்ஸ, தன்னுடைய ஆக்ரோஷ உத்திகளுக்கு பேர்போனவர்.
நிபுணர் குழுவை பான் கீ மூன் கலைக்காத வரையில் கொழும்பு ஐ.நா. வளாகத்தை தாம் இட்டுள்ள முற்றுகையை மக்கள் தளர்த்தக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
புத்த பிக்குகள் பலரும் இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டிருந்தனர்.
0 Kommentare:
Kommentar veröffentlichen