ஒட்டுமொத்த இந்திய திரைப்பட சூப்பர் ஸ்டார் நடிகர், நடிகைகளின் புறக்கணிப்பால் முற்றிலும் களையிழந்து போன சர்வதேச இந்திய திரைப்பட விழா (இஃபா) கொழும்பில் முடிவுக்கு வந்தது.
என்னென்னவோ திட்டம் போட்டு, எதுவுமே நிறைவேறாமல் போய் இலங்கை அரசுக்கு பெரும் தலைக்குனிவையும், அவமானத்தையும் ஏற்படுத்தி விட்டது இஃபா விழா.
அமிதாப் பச்சன் முதல் விஜய் வரை ஒட்டுமொத்த இந்திய சூப்பர் ஸ்டார் நடிகர், நடிகைகள் இந்த விழாவுக்குப் போகவில்லை. உலகத் தமிழர்களின் ஒரே குரலில் ஒலித்த கடும் எதிர்ப்பை மதித்து இவர்கள் கொழும்புக்குப் போகவில்லை.
இதனால் விழா சோபையிழந்து போனது. இருப்பினும் மார்க்கெட்டில் தேறாத விவேக் ஓபராய், பொமன் இரானி, சோஹைல்கான், சல்மான் கான் போன்ற சிலர் மட்டும் இதில் கலந்து கொண்டனர்.
இவர்களை வைத்து 3 நாள் விழாவை கோலாகலமாக நடத்திய இஃபா குழுவினர் நேற்றுடன் தங்களது விழாவை இனிதே நிறைவுசெய்தனர்.
இந்த விழாவில், நேற்று விருதுகளை வழங்கினார்கள். அதில் ஆமிர்கான் நடித்த 3 இடியட்ஸ் படத்துக்கு 8 விருதுகள் கிடைத்துள்ளன.
இஃபா விழாவில் இடி விழ சீமான் தலைமையிலான நாம் தமிழர் இயக்கம் முக்கியப் பங்கு வகித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அது முதலில் போர்க்கொடி உயர்த்தி போராட்டத்தில் குதித்ததைத் தொடர்ந்து பல்வேறு அமைபப்புகளும், உலகம் முழுவதும் தமிழர்களும், இஃபா விழாவை இந்தியத் திரையுலகம் புறக்கணிக்க வேண்டும் என்று உரத்துக் குரல் எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது
RSS Feed
Twitter



Dienstag, Juni 08, 2010
வானதி




1 Kommentare:
அமிதாப் பச்சன் முதல் விஜய் வரை first & last
Kommentar veröffentlichen