
ஈழத்தமிழர்களின் உணர்வுக்கு இந்த வகையில் மதிப்பளித்தார் ரஜினி என்றால் அவரது ரசிகர்கள் மட்டும் சும்மா இருப்பார்களா என்ன.
மும்பையில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டமே நடத்திவிட்டார்கள். மும்பையின் ஆசாத் மைதானத்தில் இந்த ஆர்ப்பாடம் நடந்தது.
ரஜினி ரசிகர் மன்றத்தினர், சீமானின் நாம் தமிழர் இயக்கத்தினருடன் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக, பெ.தி.க., தேசியவாத காங்கிரஸ் என பல்வேறு அமைப்பினர் கலந்துகொண்டனர்.
இலங்கையில் நடக்கும் திரைப்பட விழாவிற்கு இந்தி திரையுலகினர் எவரும் செல்லக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கியவர் ரஜினி மன்றத்தின மாநில தலைவர் ஆதிமூலம்.
அமிதாப்பச்சன், ஷாருக்கான் என்று தனித்தனி நடிகர்கள் வீட்டில் ஆர்ப்பாட்டம் செய்தது நாம் தமிழர் இயக்கம். ஒட்டுமொத்த இந்தி திரையுலகிற்கும் கோரிக்கையை வலியுறுத்த இந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.
0 Kommentare:
Kommentar veröffentlichen