உலகமகா காவியம்
இலியாத்
அடிமைகளின்
குருதியில் பூத்த
அதிசயம்.
குருட்டு ஹோமர்
காவியங்களின்
தலைமகனாய்
தலைப்பட்டான்.
ஏதேன்சில்
பசித்த சிங்கங்களுக்கு
பறிமாறப்பட்ட
அடிமைகளின் உடல்கள்
கவிதைகளுக்கு
காரணமானது.
பூமி இப்படித்தான்
சுழல்கிறது.
பஞ்சணையில்
பூரிப்பு ஒருபுறமும்
கொட்டடிக்குள்
சங்கிலியின்
முணுமுணுப்பு
மறுபுறமும்.
உராய்ந்த சங்கிலிகள்
கொழுந்துவிட்டெரியும்
காலங்கள்.
காலங்களின்
வரிசையில் பதிவு
செய்யப்பட்டிருக்கிறது.
விடுதலையின்
நெருப்புத்துளி
தீண்டப்பட
விஸ்வரூபமாய்
கனவுகள்
விரியத் தொடங்கியது.
நெருப்பை அணைக்க
கொல்லப்பட்ட
தமிழர்களின் குருதிவாடை
உலகின் நாசிகளை
துளைத்தது.
உடல்தான் வீழ்ந்தது.
கனவுகள்
உயிரோடு உலாவின.
வானத்தை நோக்கி
நிலைத்த விழிகளில்
ஏக்கம் எதிரொலித்தது.
எங்களுக்கு வெளிச்சம்
வராதா என.
ஏக்கத்திற்கு விடையாய்
ஏந்திய கருவியோடு
எதிரிக்கு எதிர்கனவாய்
எழுந்தான் எம்
தேசிய தலைவன்.
வானம் விடிந்தது.
வெளிச்சம் பிறந்தது.
சூரியனை மூடிவைக்க
துணித்தேடி அலையும்
மகிந்தாவின் கூட்டம்.
எங்கள் புலம்பல்
போர் பறையானது.
எங்கள் கனவு
உண்மையானது.
எங்கள் நாடு
உதயமானது.
நாங்கள் தமிழீழ மக்கள்.
இதை தகர்க்க
இனி யார் வருவர்.
எம் தலைவன் பாதை
இருக்கும் போது.
அண்டார்ட்டிகாவில்கூட
வியர்க்கும் எதிரிக்கு.
விடையில்லா கேள்வியும்
விடுதலையில்லா வாழ்வும்
இல்லையே உலகில்.
0 Kommentare:
Kommentar veröffentlichen