கோத்தபாய ராஜபக்ச கூறியதில் சில உண்மைகளையும் சேர்த்து கூறிவிட்டார்.
விடுதலை புலிகள் அமைப்பு இன்னும் பலம் வாய்ந்ததாகவும் உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாக இன்றும் செயல்பட்டு கொண்டிருக்கிறது.
உலகில் பல நாடுகள் உலக நாடுகளால் அங்கீகரிக்கப்படாத தமிழீழ நாட்டுடன் மிக சிறப்பான உறவுகளை கொண்டிருந்தது.
தமிழ் சமூகம் தமிழீழத்தை ஆதரிக்கவில்லை என்று திரும்ப திரும்ப கூறுவதன் மூலம் தமிழீழ மக்கள் அதையே விரும்புகின்றனர் என்பதை உலக நாடுகளுக்கு தெளிவு படுத்தியுள்ளார்.
தேசிய தலைவர் பிரபாகரன் என்ற ஒற்றை சொல்லில் தான் தமிழர்களின் விடுதலை அடங்கியுள்ளது. அவரே உலக தமிழினத்தின் ஒப்பற்ற ஒரே தலைவர். என்பதை அவர் அமைப்பு வலுவுடன் இருப்பதை கூறுவதன் மூலம் தெளிவுபடுதிள்ளார். அவரும் உயிருடன் இருப்பதை வெகு விரைவில் அவர்களாகவே கூறுவார்கள் காத்திருப்போம்.
இருந்தாலும் இன்றைய சூழ்நிலையில் சிங்கள அரசாங்கம் நமக்கு ஆதரவாக தரும் செய்திகளை நம்பாமல் விழிப்புடன் இருப்பது அவசியம்.
0 Kommentare:
Kommentar veröffentlichen