ஜனாதிபதி மகிந்த ராஜபக் மீளவும் தெரிவு செய்யப்பட்டமையானது இந்தியா- இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் பலப்படுத்தும் என இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்வை அலரிமாளிகையில் சந்தித்து உரையாடும் போதே அவர் இதனைக் கூறினார்.
இலங்கைக்கு நேற்று முன்தினம் இரவு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அலரி மாளிகையில் சந்தித்தார்.இச்சந்திப்பின் போது இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அஷோக் கே.காந்தா இலங்கை வெளிநாட்டமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க,மத்திய வங்கி ஆளுநர் ஆகியோரும் உடனிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இந்திய விஜயத்தை பிரதமர் மன்மோகன் சிங் எதிர்பார்த்திருப்பதாக இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் இலங்கை ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளார்.அலரி மாளிகையில் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போதே பிரதமர் மன்மோகன் சிங்கின் விருப்பம் குறித்து தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பின் போது ஜனாதிபதியாக மீண்டும் தெரிவு செய்யப்பட்ட மகிந்த ராஜபக்வுக்கு வாழ்த்துத் தெரிவித்த நிருபமா ராவ் தான் உயர்ஸ்தானிகராக இருந்த காலத்தை விட தற்போது இலங்கையின் முன்னேற்றங்களுக்காக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டிருப்பதை அவதானித்ததாகவும் கூறியுள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்வின் மீள் வெற்றியானது நம்பிக்கையைத் தந்திருப்பதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்குரிய சந்தர்ப்பத்தையும் வழங்கியுள்ளதாக இச்சந்திப்பில் நிருபமா ராவ் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதிச் செயலகம் தெரிவித்துள்ளது.
இச்சந்திப்பு குறித்து இலங்கையின் ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு-கிழக்கு உட்பட ஆயிரக்கணக்கான வேட்பாளர்கள் போட்டியிடுவது அவர்களுக்கு ஜனநாயகத்தின் மீது இருக்கின்ற ஆர்வத்தைக் காட்டுவதாகவும் இத்தகைய போக்கு இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த வழிவகுக்கும் எனவும் நிருபமா ராவ் குறிப்பிட்டார்.
இலங்கையில் அமைதியை ஏற்படுத்திய பின்னர் நாடு தழுவிய ரீதியில் நடத்தப்படும் பொதுத் தேர்தலில் பங்குபற்றுவதற்கு மக்கள் ஆர்வமுடன் முனைப்புக்காட்டி வருவதாகவும், வடக்கு-கிழக்கு உட் பட இத்தேர்தலில் வெற்றியீட்டுவார்கள் என எதிர்பார்க்கின்ற பல புதிய முகங்களுடன் பணியாற்று வதை தான் எதிர்பார்த் திருப்பதாகவும் ஜனாதிபதி நிருபமா ராவிடம் தெரிவித்துள்ளார்.
போரினால் இடம் பெயர்ந்து நலன்புரி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் மீளக் குடியமர்த்தி இருப்பது குறித்து நிருபமா ராவ் திருப்தி கொண்டுள்ளதாகவும் இத்தகைய மீள்குடியேற்ற நடவடிக்கை களுக்கு இந்தியா தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் எனவும் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வடக்குக்கான புகையிரதப் பாதைகளுக்கான கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கும் இந்தியா உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் நிருபமா ராவ் குறிப்பிட்டார்.
இலங்கை உறுதியளித்தபடி தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு சுமுகமான தீர்வினை உட னடியாக முன்வைக்கும்படி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் வலியுறுத்துவார் என டில்லி வட்டாரங்கள்தெரிவித்திருந்த போதிலும் அதுகுறித்த விபரங்கள் ஜனாதிபதி செயலகம் விடுத்த அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்பட்டிருக்க வில்லை.
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி யாக இரண்டாவது தடவை தெரிவு செய்யப்பட்டபின் விஜயம் செய்யும் முதல் இந் திய உயர்மட்ட அதிகாரி நிருபமா ராவ் ஆவார்.
0 Kommentare:
Kommentar veröffentlichen