இலங்கை ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி சரத் பொன்சேகா உண்ணாவிரதம் இருப்பது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரசாத் சமரசிங்க கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொன்சேகாவுக்கு மூன்று வேளை உணவுகளையும் அவரது மனைவி அனோமாவே எடுத்துச் செல்கிறார் என்பதால், அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளாரா என்பது பற்றி தெரியாது என்றும் சமரசிங்க கூறியதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும், சரத் பொன்சேகாவுக்கு செல்போன் பயன்படுத்த அனுமதிக்குமாறு உச்சநீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை, எனினும் அவர் தனது குடும்பத்தினருடன் உரையாடுவதற்காக பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் அதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Kommentare:
Kommentar veröffentlichen