வன்னி மண்ணிலிருந்து வெள்ளையரை எதிர்கொண்ட மாபெரும் தமிழ் மன்னன் பண்டாரவன்னியன் நினைவுச் சின்னம் சிறீலங்காப் படையினரால் சிதைக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
1803-08-31 ஆம் ஆண்டு, தற்போதைய முல்லைத் தீவு மாவட்டத்தில் உள்ள ஒட்டுசுட்டான் பகுதீயில், பண்டாரவன்னியனுக்கும், ஆங்கிலேய தளபதி கப்டன் றிபேக்கும் பெருஞ்சமர் நிகழ்ந்ததாகவும், இந்த மோதலில் பண்டாரவன்னியன் கொல்லப்பட்டதாகவும், குறிப்பிட்ட நினைவுக்கல் அதே காலப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்து.
கடந்த பல வருடங்களாக அந்த நினைவுச் சின்னம் இருந்த இடம், வன்னி மக்களால், புனிதமான பகுதியாக பாதுகாக்கப்பட்டுவந்தது.
இந் நினைவுச் சின்னம், பண்டாரவன்னியனின் சிறப்பையும், நினைவையும் வெளிப்படுத்தியதோடு, தமிழர்களின் முக்கிய வரலாற்றுச் சாசனமாகவும் அமைந்திருந்தது. வெளி உலகிற்கு வெளிப்படுத்தக்கூடிய ஆதாரபூர்மான ஒரே ஒரு நினைவுக்கலாக விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நினைவுச் சின்னம் இருந்தமையாலேய அந்தப்பகுதி கற்சிலை மடு எனப் பெயர்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
0 Kommentare:
Kommentar veröffentlichen