தமிழக புதிய சட்டசபை கட்டிடத் திறப்பு விழாவில் பங்கேற்க மன்மோகன்சிங், சோனியா உள்ளிட்ட தலைவர்கள் வருகை தர இருப்பதையொட்டி, மண்டபம் அகதிகள் முகாமில் உள்ளவர்கள் வெளியே செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.தமிழக சட்டசபைக்கான புதிய கட்டிடத் திறப்பு விழா வரும் 13ஆம் தேதி சென்னையில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. விழாவில் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதனையொட்டி, சென்னை மற்றும் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கடலோரப் பகுதிகளில் போலீசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கண்காணிப்புப் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மண்டபம் முகாமில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் வரும் 11, 12 மற்றும் 13 ஆகிய 3 நாட்களும் முகாமை விட்டு வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
RSS Feed
Twitter



Montag, März 08, 2010
வானதி



0 Kommentare:
Kommentar veröffentlichen