தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய நடிகர் ஜெயராம் வீடு தாக்கப்பட்டது தொடர்பாக தமிழ் இயக்குனர் சீமானுக்கு சென்னை பூந்தமல்லி நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய பிணையை அளித்துள்ளது. நடிகர் ஜெயராம் தனது வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண், “கறுத்து தடித்த எருமை போன்ற தமிழச்சி” என்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டார். இதற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்புக் கிளம்பியது. சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஜெயராம் வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
ஜெயராம் வீடு தாக்கப்பட்டது தொடர்பாக இயக்குனர் சீமான் உட்பட, ‘நாம் தமிழர்’ இயக்கத்தை சேர்ந்த 17 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதில் சீமான் உயர் நீதிமன்றத்தில் முன் பிணை பெற்றிருந்தார்.
இந்நிலையில், பூந்தமல்லி 1வது நீதிமன்றத்தில் நீதிபதி தமிழ்ச்செல்வி முன்னிலையில் இன்று சீமான் சரணடைந்து, பிணை கோரி மனுதாக்கல் செய்தார். அவருக்கு நிபந்தனை பிணை அளிப்பதாக நீதிபதி தமிழ்ச்செல்வி உத்தரவிட்டார்.
RSS Feed
Twitter



Dienstag, März 02, 2010
வானதி



0 Kommentare:
Kommentar veröffentlichen