இன்றைய செய்திகள்
புலம்பெயர்ந்த மக்களுடன் கடல் கடந்த தாயகம் குறித்துப் பேசுவதற்கு தயாராக உள்ளோம் என தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியைச் சேர்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்றிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
புலம்பெயர்ந்த மக்களுடன் கடல் கடந்த தாயகம் குறித்துப் பேசுவதற்கு தயாராக உள்ளோம். புலம்பெயர்ந்த தமிழர்கள் தனித் தாயகம் ஒன்றை அமைப்பது அவர்களின் ஜனநாயகத்தின் அடிப்படையிலானது.
நாங்கள் உருவாக்கியுள்ள தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்திலும், திருகோணமலையில் போட்டியிடவுள்ளது.
தமிழ் தேசியக்கூட்டமைப்பு எமது அடிப்படை கொள்கைகளுடன் இணைந்து போனதால்தான் எம்மால் கூட்டமைப்பின் சம பங்காளியாக இருக்க முடிந்தது.
தற்போது, அந்த நிலை மாறியுள்ளதால் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியை ஆரம்பித்துள்ளோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
.
RSS Feed
Twitter



Dienstag, März 02, 2010
வானதி




0 Kommentare:
Kommentar veröffentlichen