தேசிய தலைவரை பல முறை கொன்ற சிங்களவர்கள் மீண்டும் ஒரு முறை கொன்றதாக கூறும் கோத்தபாய போன்றவர்கள் எப்பொழுது தான் உண்மையை பேசியிருக்கின்றனர்.
கடைசி கட்ட போரின் போது படு காயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த பல்லாயிர க்கணக்கான தமிழ் மக்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற உடன்படிக்கையின் பேரில்தான் புலிகள் சரணடைய வந்தனர்.
ஆனால் நாங்களும் அதாவது நானும் எனது அண்ணன் மகேந்தாவும் பொன் சேகாவுடன் கலந்து ஆலோசித்து புத்திசாலி தனமாக வெள்ளைக் கொடி ஏந்தி வந்தவர்களையும் சுட்டு கொன்று விட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்த பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களையும் உயிரோடு துடிக்க துடிக்க கொன்றுவிட்டோம்.
என்ற உண்மையை பொன்சேகா கூறிவிடுவாரோ, என்ற பயத்தில் தான் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். இது இத்தாலி இந்தியாவிற்கும் தெரியும். என்று நடந்ததை கோத்தபாய கூறுவாரா ? பிற்காலத்தில் இந்த உண்மை தெரிந்தாலும், மேற்கத்திய நாடுகள் கூறுவது போல் இது போர்குற்றமல்ல. எங்க பௌத்த நெறிப்படி இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன் எங்கள் ராசா துட்டகைமுனு தமிழ் மன்னன் எல்லாளனை நயவஞகமாக கொன்றது போல்தான் இன்று நாங்களும் கொன்றுள்ளோம். இது தவறல்ல.
மேலும் தமிழர்களை கொல்வது என்றால் எங்கள் ராணுவ வீரர்களுக்கு பகலிலே கண் தெரியாது. இது வேறு முழுநிலவு கூடிய இரவு வேளை. விடுதலை புலிகள் ஏந்தி வந்த வெள்ளைக்கொடி முழுநிலவு வெளிச்சத்தில், ராணுவத்திற்கு கருப்பாக தெரிந்திருக்கும் அதனால் சுட்டு கொன்று விட்டார்கள் என்று ஒரு காரணத்தை கூறினாலும் அதையும் இந்த மானங்கெட்ட சர்வதேச சமூகம் கேட்டு கொண்டுதான் இருக்கும்
தமிழ் நாட்டிலிருந்து தமிழ் தேவன் (நாம் தமிழர்)
RSS Feed
Twitter



Montag, März 01, 2010
வானதி




0 Kommentare:
Kommentar veröffentlichen