Sonntag, 28. Februar 2010

”விடுதலைப்புலிகள் இருக்கிறார்கள்” -சொல்கிறார் ருத்திரகுமார்

பயங்கரவாத அமைப்பு என்று அமெரிக்க அரசால் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து செயல்படுவது, பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் செயல் என்று தற்போதுள்ள சட்டவிதிகள் ரத்துசெய்யப்படவேண்டும் என்று தொடரப்பட்டிருக்கும் வழக்கின் விசாரணைகள் அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றன.


கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி புதன்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நாடுகடந்த தமீழீழ அரசை உருவாக்க எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளுக்காக அமைக்கப்பட்டிருக்கும் குழுவுக்கு தலைமை தாங்கும் அமெரிக்கச் சட்டத்தரணி விஸ்வநாதன் ருத்ரகுமார் அவர்கள் மனுதாரர்கள் சார்பில் வாதாடினார்.

இந்த வழக்கின் நோக்கங்கள் குறித்து தமிழோசைக்கு செவ்வியளித்த ருத்ரகுமாரன் அவர்கள், விடுதலைப்புலிகள் ராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டுவிட்டதாக இலங்கை அரசு கூறினாலும், விடுதலைப்புலிகள் அமைப்பு இன்னமும் செயற்படுவதாகவும், அவர்களுடன் சேர்ந்து செயற்படுவதற்கு தங்களைப்போன்றவர்கள் விரும்புவதாகவும், அதற்கு சட்டரீதியில் இருக்கும் தடைகளை நீக்குவதற்காகவே தாம் இந்த வழக்கில் வாதாடுவதாகவும் கூறினார்.

அவரது செவ்வியின் முழுமையான ஒலி வடிவத்தை நேயர்கள் இங்கே கேட்கலாம்.

செவ்வி- சட்டத்தரணி வி.ருத்திரகுமார்



http://www.bbc.co.uk/mediaselector/ondemand/tamil/meta/dps/2010/02/100227_rudranew?bgc=003399&lang=ta&nbram=1&nbwm=1&bbram=1&ms3=6&ms_javascript=true&bbcws=1&size=au&bbwm=1
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen