இணைந்த வடக்கு கிழக்கு மாகணத்தின் முதலமையச்சராக இருந்த வரதராஜப்பெருமாளுக்கு தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குமாறு இந்தியா ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
அதேவேளை இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணம் ஒன்றை ஏற்படுத்தவும் அரசாங்கத்தின் பங்காளிகளான கருணா, பிள்ளையான் ,டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் மூலமாக அதனை நிர்வகிப்பதற்கும் இலங்கை அரசாங்கதிற்கு இந்தியா ஆலோசனை வழங்கியுள்ளது.
இதன் மூலம் இலங்கையில் அரசியல் பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியும் என்று இந்தியா கருதுகின்றது.
அதேசமயம் புலம் பெயர் நாடுகளில் தோற்றம் பெற்று வரம் நாடு கடந்த அரசாங்கம் மற்றும் வட்டுக்கோட்டை தீர்மானம் மீதான வாக்கெடுப்புகள் மூலம் தமிழ் மக்கள் பிரிந்த போகும் உரிமையை அல்லது சுயநிர்ணய உரிமையை மேற்குலக நாடுகளின் உதவியுடன் பெறுவதை தடுக்க முடியும் என்றும் இந்திய நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் அரசியல் தீர்வு முன்வைக்கப்பட்டால் மேற்குலக நாடுகளின் தலையீட்டினை இல்லாமல் செய்ய முடியும் என்றும் இந்தியா கருத்து வெளியிட்டுள்ளது.
0 Kommentare:
Kommentar veröffentlichen