Mittwoch, 24. Februar 2010

பிரித்தானியா பாராளுமன்றத்தில் இடம்பெற்ற உலகத்தமிழர் பேரவை

பிரித்தானியாவில் இன்று முத‌லாவ‌து உல‌க‌த் த‌மிழ‌ர் பேர‌வையின் மாநாடு இன்று ந‌டைபெற்ற‌து. பிரித்தானிய‌ நாடாளும‌ன்ற‌ வளாகத்தில் ந‌டைபெற்ற‌ இம் மாநாட்டில் பிரித்தானிய வெளிநாட்ட‌மைச்ச‌ர் டேவிட் மில‌பான்ட் ம‌ற்றும் ப‌ல‌ பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ள் க‌ல‌‍ன்து கொண்ட‌ன‌ர்.



பிரித்தானியப் பிரதமர் கோடான் பிரவுன் அவர்களும் உலகத் தமிழ் பேரவைக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். இதன் அமைபாளர்கள் பிரித்தானியப் பிரதமரைச் ச‍ந்தித்து உலகத் தமிழர் பேரவை குறித்து விளக்கமளித்தனர்.



இக் கூட்டத்தில் உரையாற்றிய டேவிட் மிலபான் அவர்கள் உலகத் தமிழர் பேரவை உருவாக்கம் குறித்து பாராட்டுத் தெரிவித்தார். அவர் தொடர்‍ந்தும் குறிப்பிடுகையில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல் குறித்தும் தாம் அதிக கவனம் செலுத்துவதாகவும் கூறினார்.



போர் நடைபெற்ற கால கட்டத்தில் இரு தரப்பும் யுத்தக் குற்றங்கள் செய்ததாக டேவிட் மிலபான் தெரிவித்த கருத்தை டெய்லி மிரர் பத்திரிகை திரித்து விடுதலைப் புலிகளை டேவிட் மிலபான் கடுமையாகத் தாக்கிப் பேசியதாக செய்திகளை வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.



மேலதிக செய்திகள் ஒலிவடிவில் கிடைக்கப்பெறும்


  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen