தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட கே.தங்கேஸ்வரி உள்ளிட்ட சிலர் நேற்று ஜனாதிபதியைச் சந்தித்துள்ளனர்.
இந்தச் சந்திப்பின் போது வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோரும் உடனிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ள தமிழ் வேட்பாளர்கள் கைச்சாத்திட்டதன் பின்னர், இது தொடர்பில் கலந்துரையாடும் பொருட்டே ஜனாதிபதியைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
அத்துடன் இதன் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் ஏற்பட்ட முறுகல் நிலை தொடர்பிலும், எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Kommentare:
Kommentar veröffentlichen