அதிபர் தேர்தலை ரணில் விக்கிரமசிங்கே, தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சந்தித்த பொன்சேகா தற்போது அப்படியே அணி மாறி விட்டார். ஜனதா விமுக்தி பெரமுனா உள்ளிட்ட சிங்கள கட்சிகளுடன் இணைந்து ஜனநாயக தேசியக் கூட்டணி என்ற புதுக் கூட்டணியை அவர் உருவாக்கியுள்ளார்.
அதிபர் தேர்தல் முடிந்த கையோடு பொன்சேகாவைப் பிடித்து ராணுவத்தின் பிடியில் போட்டு விட்டார் ராஜபக்சே.
தேர்தல் கூட்டணி, போட்டி குறித்த தனது முடிவை அவர் விரைவில் அறிவிக்க வேண்டும் என ரணில் விக்கிரமசிங்கே கோரி வந்தார். ஆனால் தற்போது தடாலடியாக புதிய கூட்டணி ஒன்றை தனது தலைமையில் உருவாக்கியுள்ளார் பொன்சேகா.
இதை அவரது மனைவி அனோமா, முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், முன்னாள் எம்.பியும், ராஜபக்சேவின் முன்னாள் ஆதரவாளருமான அர்ஜூன ரணதுங்கா, ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியின் பொதுச் செயலாளர் தில்வின் சில்வா உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
அப்போது அனோமா கூறுகையில், கொழும்பு மாவட்டத்திலிருந்து பொன்சேகா போட்டியிடுவார். தற்போது பல்வேறு கட்சிகளை இணைத்து புதிய கூட்டணி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு ஜனநாயக தேசியக் கூட்டணி என்று பெயரிடப்பட்டுள்ளது.
கூட்டணியின்த லைவராக பொன்சேகா இருப்பார். இக்கூட்டணியில் ஜனதா விமுக்தி பெரமுனா, நவ சிங்கள உருமயா, ஜனநாயக ஐக்கிய தேசிய கூட்டணி, ஐக்கிய மக்கள் கூட்டணி, தேசிய முஸ்லீம் கட்சி ஆகியவை இடம் பெறும் என்றார்.
பொன்சேகா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளில் சில அதிபர் தேர்தலின்போது, ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கூட்டணியில் இடம் பெற்றிருந்தவையாகும்.
பொன்சேகாவின் இந்தப் புதிய கூட்டணியின் மூலம், ராஜபக்சே தலைமையிலான கூட்டணி, ரணில் தலைமையிலான கூட்டணி, தற்போது பொன்சேகா தலைமையிலான கூட்டணி என மூன்று கூட்டணிகள் உருவாகியுள்ளன. மும்முனைப் போட்டி உருவாகியுள்ளது.
இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்டவை எந்தக் கூட்டணியில் இணையும் அல்லது தனி அணியாக போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
0 Kommentare:
Kommentar veröffentlichen