வாஷிங்டன் :""சீனாவை விட, பலம் வாய்ந்த நாடாக இந்தியா உருவெடுக்கும் காலம் வரும்,'' என, திபெத் புத்த மத தலைவர் தலாய் லாமா கூறியுள்ளார்.
திபெத் புத்த மத தலைவர் தலாய் லாமா, அமெரிக்கா சென்றுள்ளார். வாஷிங்டனில் நடந்த விழாவில், சிறந்த ஜனநாயக சேவைக்கான பதக்கம் அவருக்கு வழங்கப்பட்டது.
இந்த விழாவில் அவர் பேசியதாவது:தற்போதுள்ள சூழ்நிலையில், பொருளாதார ரீதியாக சீனாவை விட, இந்தியா பின்தங்கியிருக்கலாம். ஆனால், சீனாவை விட பலம் வாய்ந்த நாடாக இந்தியா உருவெடுக்கும் காலம் வரும்.சுதந்திரமாக செயல்படும் நீதித் துறை, மிகச் சிறந்த ஜனநாயகம், வெளிப்படையான போக்கு போன்றவை இந்தியாவின் சிறப்பம்சம். இதுபோன்ற விஷயங்கள் சீனாவில் இல்லை.இந்திய பிரதமர் மன்மோகன் சிங், மகான் போன்றவர். பழகுவதற்கு எளியவர். அவரின் தோற்றமும் மகான் போன்று தான் உள்ளது. சீனாவை பொறுத்தவரை தலைவர்கள் கோர்ட்டுக்கு போவது இல்லை. அங்கு அரசியல் கட்சியால் தான் கோர்ட் நடத்தப்படுகிறது.ராணுவமும் அப்படித் தான்.
ஆனால், அதற்கு மக்கள் ராணுவம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது, விசித்திரமானது. சீன தலைவர்கள் தற்போது சமத்துவம் பற்றி எல்லாம் கவலைப்படுவது இல்லை. முதலாளித்துவம் தான் அங்கு முழு வீச்சில் உள்ளது.பணத்தைத் தவிர, வேறு எதைப் பற்றியும் அவர்கள் சிந்திப்பது இல்லை. சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஓய்வு பெறும் நிலையை நெருங்கி விட்டது. அதற்கான நேரம் வந்து விட்டது.இவ்வாறு தலாய் லாமா பேசினார்.
RSS Feed
Twitter



Dienstag, Februar 23, 2010
வானதி




0 Kommentare:
Kommentar veröffentlichen