சிங்கள மக்கள், படையினர் மற்றும் மகா சங்கத்தினர் மத்தியில் பிளவுகளை மகிந்த றாஜபக்ச ஏற்படுத்தி விட்டார் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
30 வருட கால போரின் போது பிரபாகரனால் கூடச் செய்ய முடியாமல் போன இந்த விடயத்தை மகிந்த சுலபமாகச் செய்து விட்டார் எனக் குறிப்பிட்ட ரணில் விக்கிரமசிங்க நாட்டைக் காப்பதற்காக உயிரபாயத்தையும் பொருட்படுத்தாமல் போராடிய ஒரு யுத்த வீரனை துரோகியாக்கி சிறையில் அடைத்து வைத்துள்ள அரசாங்கம் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட கருணா போன்றவர்களை அமைச்சர்களாக்கி அழகு பார்க்கிறது எனவும் குற்றம் சாட்டினார்.
சரத் பொன்சேகாவை விடுதலை செய்யம்படி கோரி பத்து லட்சம் கையெழுத்துக்களை திரட்டும் நிகழ்வில் தனது கையொப்பத்தை இட்ட போதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்
" நாம் யாரையும் ஏமாற்றவும் இல்லை, துரோகம் இழைக்கவும் இல்லை. ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால் அல்லது துரோகம் இழைத்தால் நாம் பதிலடி கொடுக்கத் தயங்கமாட்டோம்
RSS Feed
Twitter



Donnerstag, Februar 18, 2010
வானதி
.jpg)



0 Kommentare:
Kommentar veröffentlichen