Donnerstag, 18. Februar 2010

சீன உதவியுடன் சிறீலங்காவில் கூகிள் இணையத்தளம் முடக்கப்படும் சாத்தியம்


சிறீலங்கா அரசுக்கும், தேசிய பாதுகாப்புக்கும் எதிரானவை என சில இணையத்தளங்களை சிறீலங்கா அரசு குறிப்பிட்டுவருகிறது. அந்த தளங்களை சிறீலங்காயில் முடக்குவது குறித்து தகவல்தொடர்பு ஆணையம் துரித நடவடிக்கை எடுக்கவுள்ளதாக செய்திகள் வந்திருந்தன. ஆனால் பொதுத்தேர்தல் நடந்து அதன் முடிவு வெளியாகும்வரை இவ்வாறான இணையங்களை முடக்கும்பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இருப்பினும் இந்த ஆண்டின் ஒரு செய்தித்தளத்தை 2,00,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்துள்ளார்கள் என்று நிரூபித்தால் மட்டுமே அரச தகவல் திணைக்களத்தில் ஊடக அனுமதியை அந்த செய்தித்தளத்துக்கு வழங்குவதென ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிர்வுக்குக் கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன. இதேபோன்ற ஒரு ஒழுங்குமுறையை முன்பே அறிமுகப்படுத்தியிருந்தபோதும் அது கடுமையாக பின்பற்றப்படவில்லையாம்.



எனவே இப்போதைய ஒழுங்குமுறைகளுக்கு அமையாத செய்தித்தளங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஊடக அனுமதியை ரத்துசெய்யும்படி ஊடக திணைக்களத்துக்கு உத்தரவு கிடைத்துள்ளது. அத்தோடு சிறீலங்காயில் இத் தளங்களைப் பார்வையிட முடியாது.



மேலும் புலனாய்வுப் பிரிவுகளால் கூகிள் தளத்தை கண்காணிக்க முடியவில்லை என்ற காரணத்தால் சிறீலங்காயில் கூகிள் வலைத்தள தேடுபொறியை முடக்கும் எண்ணத்தையும் அரசாங்கம் கொண்டுள்ளது. இதை நடைமுறைப்படுத்துவதற்கு வேண்டிய தொழில்நுட்ப உதவிகள் சீனாவிடம் இருந்து சிறீலங்காக்குக் கிடைத்துள்ளன. சீனாவும் கூகுள் தளத்தை தனது நாட்டில் கட்டுப்படுத்திவைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கூகுள் அமெரிக்க கம்பனி என்பதால் சீனா இதன் மீது நம்பிக்கை இல்லை என்ற தோற்றப்பாட்டை வெளுக்கொண்டுவர முயல்வதாகச் சொல்லப்படுகிறது.



ஆக மொத்தத்தில் சிறீலங்காயில் ஊடகச் சுதந்திரம் கேள்விக்குறியாகியுள்ளது. எதை மக்கள் பார்க்கலாம் பார்க்கக் கூடாது என்பதை அரசாங்கமே முடிவு எடுக்கின்ற நிலை காணப்படுகிறது.
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen