இலங்கை உட்பட ஆசியாவில் சுமார் 4 பாரிய துறைமுகங்களை அமைக்கும்
திட்டத்திற்கு சீனா தயாராகி வருகிறது. இலங்கை, மியான்மார், பங்களாதேஷ்,
மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளின் கரையோரங்களில் சீனாவின்
மேற்பார்வையில் பாரிய துறைமுகங்கள் அமைக்கப்பட இருப்பதாக அமெரிக்க உளவு
நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவின் உளவு நிறுவனமான ரோ
அமைப்பு இது குறித்து இந்தியாவை எச்சரித்து வந்தது. இலங்கையில்
ஹம்பாந்தோட்டையில் பாரிய துறைமுகம் ஒன்றை நிறுவ மகிந்த சீனாவுடன் ஒரு
ரகசிய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது.
நிறுவப்படப்போகும் துறைமுகத்தில் சீனத் தயாரிப்பிலான அதி சக்திவாய்ந்த
ராடர்கள், மற்றும் கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்பட இருப்பது இந்தியப்
பாதுகாப்பை பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளது. இதற்கு இலங்கையும்
ஒத்துப்போவது பெரும் தலையிடியாக தற்போது அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கணணித் துறையில் பெருவளர்ச்சி கண்டுள்ள இந்தியாவின் உதவியை இலங்கை
நாடாது, தனது நாட்டில் இணையங்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை இலங்கை
தற்போது சீனாவிடம் கையளித்துள்ளது. இதில் பெரு வேடிக்கை என்னவென்றால்,
முழு இலங்கைக்குமே இன்டர் நெட் தொடர்புகள் இந்தியாவில் இருந்து கேபிள்
மூலமாக கடலுக்கு அடியால் இணைக்கப்படுகிறது என்பதே ஆகும்.
அதாவது பெறுனராக ஒருவரிடமும், அச் சேவைகளில் சிலவற்றை தடைசெய்ய
இன்னுமொருவரையும் இலங்கை அணுகியிருப்பது இந்தியாவை சீண்டிவிடும் செயலாக
அமைகிறது. சீனா இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தனது வல்லாதிக்கத்தை
பெருக்க தற்போது முயன்று வருகிறது. இந்தச் சூழ் நிலையில் இலங்கையில்
புலிகள் ஒடுக்கப்பட்டு அங்கு பல வெளிநாடுகள் கால்வைக்க ஆரம்பித்திருப்பது
இந்தியாவை மேலும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.
விடுதலைப் புலிகள் இலங்கையில் போரில் ஈடுபட்டிருந்தால் சீனா போன்ற
நாடுகள் இலங்கையில் காலூன்ற வாய்ப்பே இல்லை என சில இந்திய கொள்கை
வகுப்பாளர்கள் தற்போது கருதுகின்றனராம். தம்மோடு நெருங்கிய உறவைப்
பேணிவரும் சில இலங்கைத் தமிழர்களை இந்திய அதிகாரிகள் சிலர் தொடர்புகொண்டு
தமது நிலைப்பாட்டை விழக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. புலிகளைப்
பழிவாங்கவேண்டும் என்று காங்கிரஸ் கட்சி பிடிவாதமாக இருந்ததே அன்றி அதன்
பின்னர் உருவாகப் போகும் விளைவுகள் குறித்து சரிவர ஆராயவில்லை என அவர்கள்
வருந்துகின்றனராம்.
இனியும் ஒரு ஆயுதப்போராட்டம் ஒன்றை இந்தியாவே ஆரம்பித்துவைக்க முயலுமா
என்று தற்போது சந்தேகங்கள் தோன்றியுள்ள நிலையில், அது பிராந்திய நலன்
கருதியே உருவாக்கப்படும் சாத்தியக்கூறுகள் இருப்பதையும் யாரும்
மறுப்பதற்கில்லை.
 RSS Feed
 RSS Feed Twitter
 Twitter 

 


 Montag, Februar 22, 2010
Montag, Februar 22, 2010
 வானதி
வானதி

 
 
 



0 Kommentare:
Kommentar veröffentlichen