தமிழ் திரையுலகில் சமீபகாலமாக எடுக்கப்படும் முன்னணி நட்சத்திரங்கள் நடித்த புதுப் படங்கள் திரையரங்குகளில் வெளிவருவதற்கு முன்பே வெளி மார்க்கெட்டில் திருட்டு விசிடிக்களாக உலா வருவது அதிகரித்து வருகிறது.அதுவும் இந்த மதுரை இதன் மையமாக செயல்படுவது வேதனையின் உச்ச கட்டம்,
திருட்டு விசிடி பிரச்சினையை சமாளிக்க முடியாமல் திரையுலகம் திணறிக் கொண்டுள்ளது. சமீபத்தில் திரைக்கே வராத நிலையில் ஜக்குபாய் படத்தை இன்டர்நெட்டில் வெளியிடவே அதிர்ந்து போனது திரையுலகம்.
இதையடுத்து ரஜினி - கமல் துணையோடு கலை உலகை ஆளும் முதல்வரைப் பார்த்து திருட்டு விசிடி விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர். இதையடுத்து குண்டர் சட்டம் பாயும் என தமிழக அரசு எச்சரித்தது.ஆனால் அந்த எச்சரிக்கை மதுரைக்கு மட்டும் ஏனோ செல்லவில்லை.
இதையடுத்து வேலிக்கு ஓனான் சாட்சி என்ற கதையாக உயிருள்ள வரையில் தமிழே மூச்சாக வாழும் (அப்படின்னு அவரே சொல்லிப்பார்) நடைபிண முதல்வருக்கு திரையுலகம் புகழாரம் சூட்டி விழா எடுத்தது. தற்போது தமிழகத்தின் முக்கிய நகரங்களில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை அதிரடி சோதனைகளை வீடியோ தடுப்பு பிரிவு முடுக்கி விட்டு திருட்டு விசிடி வேட்டையை நடத்தி வருகிறது என்று டம்மி பீஸ் கதையாக கூடுதல் டிஜிபி பேட்டி அளித்தார் என்பது நகைச்சுவையின் உச்சக்கட்டம்.
தென் மாவட்டங்களில் ஜக்குபாய், கோவா, தீராத விளையாட்டு பிள்ளை, அசல் உள்பட புதுப்படங்களின் திருட்டு விசிடிக்கள், டிவிடிக்கள் ரூ.40க்கு விற்பனையாகிறது.ஒரே டிவிடியில் 2 புதுப் படங்களை சேர்த்து பிரின்ட் போட்டு சூடாக விற்கிறார்கள்.
மதுரையில்தான் திருட்டு விசிடி தயாரிப்பு !!!!!
இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் மதுரை மாநகரில் இருந்துதான் தமிழகத்தின் முக்கிய பகுதிகளுக்கு புதுப்பட விசிடிக்கள், டிவிடிக்கள் சப்ளை ஆகிறது.சமீபத்தில் வெளியான அனைத்துப் படங்களின் திருட்டு விசிடிக்களையும் மதுரையை சுற்றி உள்ள ஏரியாக்களில் பார்க்க முடிகிறது.
அதேசமயம், தமிழ்ப் படம் என்ற புதிய படத்தின் திருட்டு விசிடியை மட்டும் எங்குமே பார்க்க முடிவதில்லை. ஆனால் அதைத் தவிர எல்லா படமும் மார்க்கெட்டில் ரூ.20 முதல் 40 வரை கிடைக்கின்றன.
அப்படி என்ன இந்த தமிழ்ப்படத்தின் சிறப்பு?
காரணம் மதுரை மண்ணின் சக்கரவர்த்தி அழகிரியின் அடுத்த ஒரே வாரிசான தயாநிதி தயாரித்த படம் என்பதை தவிர வேறொன்றும் அந்த படத்துக்கு தனித்துவம் கிடையாது.இதில் ஆச்சரியம் என்னவென்றால் வெளிநாடுகளில் கூட இந்த படத்திற்கான திருட்டு விசிடியை பார்க்க முடியாததுதான்.
அசல் படம் வெளியான இரண்டே நாட்களில் அந்த படத்திற்கான திருட்டு விசிடி பிடிபட்ட முதல் இடமே மதுரைதான் என்பது கூடுதல் செய்தி.
திருட்டு விசிடி மட்டுமில்லைங்க , மத்த எல்லா அயோக்கியத்தனத்துக்கும் மதுரை தாங்க மையம். கொலை, கொள்ளை, ஊழல், கற்பழிப்பு, துரோகம் , நயவஞ்சகம், பொய் , சாதிப்படுகொலை, மொள்ளமாரித்தனம், முடிச்சவிக்கித்தனம் இன்னும் விட்டுப்போனது எல்லாத்துக்கும் மையம் மதுரை தான் என்று மதுரைக்காரர்கள் அனைவரும் சட்டையை பெருமையாக தூக்கி விட்டு கொள்ளலாம்.
அழகிரியை தேர்ந்தெடுத்த மதுரை மக்களையே இந்த பாவம் போய் சேரும். யார் நல்லவன்,திறமைசாலி என்று இனம் காண தெரியாமல் கூலிக்கு மாறடிக்கும் கும்பல் இந்த மாமன்னரை சுற்றி எப்பொழுதும் இருக்கும்.அவர்களுக்கு வேண்டியது பிச்சை காசும், தண்ணியும், பிரியாணியும் மட்டுமே. அவர்கள் செய்யவேண்டியது எல்லாம் நாய் போல் இவர் கூட சுத்தவேண்டியது. அவ்வளவுதான். மதுரை வீரம்மிக்க மண் என்பது போய் கூலிக்கு மாறடிக்கும் மண்ணாகி ஆகிவிட்டது
எங்கிருந்து செய்தால் பாதுகாப்பு கிடைக்குமோ அங்கிருந்து செயலாற்றுவது எப்போதுமே புரிந்து கொள்ளக்கூடியதே. மதுரையில் இருந்து செயல்பட்டால், அண்ணனின் அமோக ஆதரவு கிடைக்கும் என்று திருட்டு விசிடி திருடர்கள் புரிந்து கொண்டுவிட்டனர்.
தமிழ் மக்களே தயவு செய்து பார்லிமென்ட் நியூஸ் பாருங்கள் உங்கள் தலைவர்களின் லட்சணம் என்ன என்று தெரியும். பல லட்சம் பேர் ஒட்டு போட்டு, பல கோடி ரூபாய் செலவு செய்து மக்கள் பிரச்சினைக்கு குரல் கொடுங்கள் என்றால் இந்த அழகில்லாத கிரி நான் தமிழ் பேசுவேன் என்று கட் அடித்து மக்களை ஏமாற்றுகின்றார், நன்கு படித்த ஆங்கில அறிவு உள்ள எத்தனையோ திமுக தலைவர்கள் உள்ளபோது இவனை மந்திரி ஆக்கியது சுயநலத்தின் உச்ச கட்டம். திமுக ஆட்டுமந்தைகளே சிந்தியுங்கள்.
இந்த உத்தமருக்கு அவரோட கட்சி கொள்கையே தெரியாது.இதுல உரக் கொள்கையை பற்றி இந்த வல்லவர் பேச போகிறார்.முடியலடா சாமி.
இதை பற்றி அழகிரியிடம் நம் நிருபர் கேட்டதற்கு இதலாம் எனக்கு தெரியாது அட்டாக் பாண்டியை கேளுங்க எனக்கே இங்க இந்திபடிக்க நேரம் பத்தல.படிச்சாலும் இந்த வயசுல மண்டையில ஏறமட்டேங்குது என்று ஒரே வரியில் பதிலை கொடுத்தார்..
மக்களே நான் நையாண்டியாக எழுத நினைத்தாலும் இப்படி ஒரு அராஜக அரசியல்வாதியின் கொடுமைகளை ஏன் கேள்வி கூட நாம் கேட்காமல் நடைபிணமாக வாழ்கிறோம் என்ற கேள்வியை உங்கள் முன் என்னால் வைக்காமல் இருக்க முடியவில்லை.
0 Kommentare:
Kommentar veröffentlichen