தமிழர் மீட்சிப்படையில் இருந்த முத்துக்குமாருக்கும், புதுக்கோட்டை திராவிட கழகத்தின் முன்னாள் மாவட்ட தலைவர் கரு.காளிமுத்து மகள் மாதரசிக்கும் இன்று திருமணம் நடைபெற்றது.
புதுக்கோட்டை ஜெயின் பேலஸில் தமிழ் முறைப்படி நடந்த இத்திருமணத்திற்கு கொளத்தூர்மணி, சீமான், நெடுஞ்செழியன், காசிஆனந்தன் போன்றோர் முன்னிலை வகுத்தனர்.
இத்திருமண விழாவில் பேசிய காசிஆனந்தன், ‘’75 கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஈழம் இன்று 15 கிலோமீட்டராக சுறுங்கிவிட்டது. ஈழமண் பறிபோனது.
தமிழ் ஈழத்தில் மண்ணை இழந்துவிட்டோம். அந்த மண்ணை இழந்தாலும் விடமாட்டோம். ஆயுதப்போர் தொடங்கும், இது வரை ஈழம் மூன்று கட்ட போர்களை சந்தித்திற்கிறது.
முதற்கட்ட போர் பேச்சுவார்த்தை, இரண்டாம் கட்ட போர் அறப்போராட்டம், மூன்றாம் கட்ட போர் பிரபாகரன் தலைமையில் ஆயுதப்போராட்டம். நான்காவது போரும் ஆயூதப்போராட்டம்தான்.
ஆயுதப்போராட்டம்தான் எங்கள் தீர்வு. போர்க்குணம் கொண்டவர்கள் இருக்கிறார்கள். போராட்டம் தொடரும்’’ என்று தெரிவித்தார்.
RSS Feed
Twitter



Sonntag, Februar 21, 2010
வானதி




0 Kommentare:
Kommentar veröffentlichen