வவுனியாவின் செட்டிக்குளம், வலைமாறு அகதி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 49 தமிழ்ப்பெண்கள், இராணுவத்தினரால் பூசா தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கடந்த 14 ம் திகதி கைது செய்யப்பட்டுள்ளதாக முகாம் அதிகாரிகளால் கூறப்படுகிறது. பூசா முகாமில், தற்சமயம் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை யாழ் மனித உரிமை ஆணணக்குழுவும் உறுதி செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட 49 பெண்களில் 10 பேர் யாழ்ப்பாணத்தையும், 17 பேர் கிளிநொச்சியையும், 14 பேர் முல்லை தீவையும் சேர்ந்தவர்கள். 4 பேர் மல்லாவியை சேர்ந்தவர்கள். மற்றும் தலா ஒருவர் அம்பாறை, புத்தளம், வவுனியா மற்றும் திருகோணமலையை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
கடந்த மே மாதம் முதல், வவுனியா செட்டிக்குளம் முகாமில் இருந்து பெருந்தொகையான இளைஞர் யுவதிகள் அடிக்கடி காணாமல் போனதுடன், அதிகமானோர் இவ்வாறு பூசா முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதாக தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Kommentare:
Kommentar veröffentlichen