Donnerstag, 14. Januar 2010

அயர்லாந்து தலைநகர் டப்ளினில் போர்க்குற்ற விசாரணை நடைபெறவுள்ளது.


அயர்லாந்து தலைநகர் டப்ளினில் போர்க்குற்ற விசாரணை நடைபெறவுள்ளது.


எழுதியது: உலகத்தழிழ் இணையச் செய்தியாளர் இல்13th தை 2010



அயர்லாந்து தலைநகர் டப்ளினில் போர்க்குற்ற விசாரணை நடைபெறவுள்ளது.
read this item

தொடர்புடைய செய்திகள்

No Related Post

இலங்கையில் நடந்தேறிய போர் தொடர்பாகவும் அதன் போது இலங்கை ஆயுதப்படையினர் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பாகவும் அதன் பின் ஏற்பட்ட விளைவுகள் தொடர்பாகவும் நிரந்தர மக்கள் நீதிமன்றம் (Permanent Peoples’ Tribunal) விசாரணையை நடாத்தவுள்ளது. இந்த நிரந்தர மக்கள் நீதிமன்றம் 2002 ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையே கைச்சாத்திடப்பட்ட சமாதான உடன்படிக்கை முறிவடைவதற்கு ஏதுவாக இருந்த உள்நாட்டு, வெளிநாட்டு காரணிகள் பற்றியும் ஆராய உள்ளது.



இந்த நிரந்தர மக்கள் நீதி மன்றமானது, மனித உரிமைகள் மற்றும் நீதித்துறை சம்மந்தமாக பல அனுபவங்களைக் கொண்ட, உலகின் பல பாகங்களில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட சிறந்த 11 பேரைக் கொண்டு நடாத்தப்பட இருக்கின்றது. இந்த நிரந்தர மக்கள் நீதி மன்ற விசாரணை தை 14ம், 15ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.



இந்த நிரந்தர மக்கள் நீதி மன்ற விசாரணை அறிக்கையானது தை 16ம் திகதி மாலை 2 மணியளவில் Trinity College Dublin இல் வெளியிடப்பட உள்ளது. இந்த விசாரணை அறிக்கை வெளியீட்டிற்கு அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அயர்லாந்து தமிழர் அமைப்பினர் கேட்டுக்கொள்ளுகின்றனர். மேலும்] http://www.eelamwebsite.com/
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen