Donnerstag, 14. Januar 2010

வரலாறு காணாத பேரழிவு - ஹைட்டியில் 100 000 இற்கும் அதிகமானோர் பலி


செவ்வாய்க்கிழமை இரவு அமெரிக்க கரிபியன் நாடான ஹைட்டியைத் தாக்கிய பயங்கர பூகம்பத்தில் பலி எண்ணிக்கை 100 000 ஐயும் தாண்டிச் செல்லக்கூடும் என மீடியாக்கள் அச்சம் தெரிவித்துள்ளன.




கரிபியன் தீவுகளிலேயே மிக அதிகளவான 7.3 ரிட்சர் ஸ்கேலில் பதிவாகியுள்ள இந்த பூகம்பம் ஹைட்டியின் தலைநகரான போர்ட் அவு பிரின்ஸ் இல் உள்ள ஏறக்குறைய அனைத்துக் கட்டடங்களையும் தரை மட்டமாக்கியுள்ளது.



இவற்றில் அதிபர் மாளிகை, பாராளுமன்ற கட்டடம்,ஐ.நா சமாதானச் செயலகம்,பாடசாலைகள், வரிவிதிப்பு அலுவலகங்கள்,வைத்திய சாலைகள் என்பன அடங்கும். பூகம்பம் ஏற்பட்டு இரு நாட்களாகியும் இன்னமும் பல்லாயிரக் கணக்கான மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியும் தப்பித்தவர்கள் அடிப்படை வசதிகளான உணவு நீர் இன்றி வீதிகளில் மருத்துவ சேவைக்காக காத்துக் கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில் ஹைட்டியின் அரசாங்கத்தால் உடனடியாக மீட்புப் பணிகளைத் தொடங்கவோ பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்கவோ முடியாத நிலை காணப்படும் அதேவேளை பன்னாட்டு நிறுவனங்களின் உதவிகளும் மிகத் தாமதமாகவே அங்கு கிடைத்துள்ளன. மேலும் அமெரிக்க அதிபர் ஒபாமா தனது அனுதாபச் செய்தியில் ஹைட்டி அதிபருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது உலக நாடுகள் அவசரமாகத் தமது நிதியுதவிகளையும் மீட்பு நடவடிக்கைகளையும் வழங்க முன் வந்துள்ளன. ஐ.நா ரூ 500 கோடியும் உலக வங்கி 100 மில்லியன் டாலர்களும் நிவாரணம் அளித்துள்ளன.

மேலும்] http://www.eelamwebsite.com/
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen