Freitag, 18. Dezember 2009

சரத்பொன்சேகா தேசத்துரோகியெனில் குமரன் பத்மநாதன் தேசாபிமானியா? - ரனில்


வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த புலித்தேவன் மற்றும் நடேசன் போன்ற புலிகளின் உறுப்பினர்களை பின்னாலிருந்த புலிகளே சுட்டுக்கொன்றிருந்தால் பிரேத பரிசோதனையை மேற்கொண்டு அப்போதே அதனை உறுதிப்படுத்தியிருக்கலாம் என்று சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய தேசியக்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் ஏன் அப்படி செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.வன்னியில் 3 இலட்சம் பேர் உண்ண உணவில்லாமல் பெரும் துன்பத்தை அனுபவித்து வரும் நிலையில், அரசாங்கம் குமரன் பத்மநாதனை (கே.பி) பாதுகாப்பு இல்லத்தில் வைத்து உயர் விருந்தளித்து வருகிறது.


தேசத்துரோகிகள் பற்றியும் தேசாபிமானிகள் பற்றியும் பேசும் இவர்கள், குமரன் பத்மநாபனை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.



ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்களை சிறிகொத்தாவில் நேற்று சந்தித்து கட்சி நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்ந்ததன் பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், யுத்த நடவடிக்கையில் தனது பணியை சிறப்பாக முன்னெடுத்துச் சென்ற ஜெனரல் சரத் பொன்சேகாவை அரசாங்கம் இன்று தேசத்துரோகியென்று கூறுகின்றது. அரசாங்கத்தின் செயற்பாட்டை பார்க்கின்ற போது குமரன் பத்மநாதனை தேசாபிமானியாக்கியுள்ளது என்றே எண்ணத்தோன்றுகிறது.



இவ்வாறான செயற்பாடுகளினால் தான் அர்ஜுன ரணதுங்க போன்றவர்கள் எம்டன் இணைந்து கொண்டுள்ளார்கள். பல அமைச்சர்களும் எம்டன் எதிர்காலத்தில் இணைந்து கொள்ளவிருக்கின்றனர்.



நாட்டின் சட்டம் ஒழுங்கும் இன்று சீர்குலைந்துள்ளது. ஊழல் நிறைந்த ஆட்சியே நடக்கிறது.



இதற்கு முற்றுப்புள்ளி வைத்து அதனை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காகவே ஜனாதிபதி வேட்பாளராக நாம் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவை நிறுத்தியுள்ளோம்.



ஊழல் நிறைந்த ஆட்சியை ஒழித்து நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு எமது பொதுவேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவை நாம் வெற்றிபெறச் செய்ய வேண்டும்.அதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்றார்.



இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கருத்து தெரிவிக்கையில், ஜனவரி மாதம் 26ஆம் திகதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் வெற்றி நிச்சயம். இதனை வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்த மஹிந்த ராஜபக்ஷவுடன் கூடியிருந்த அரசாங்கத்தின் அமைச்சர்களின் கரங்களில் காணக்கூடியதாக இருந்தது.



குடும்ப ஆதிக்கத்தினால் எமது நாடு பல்வேறு நட்டங்களை அடைந்துள்ளது. அதனை மாற்றியமைத்து எமது நாட்டை அபிவிருத்தி பாதையில் இட்டுச்செல்ல வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. அதற்காக நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.

தகவல் : Vanathihttp://www.eelamwebsite.com/
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen