தமது சார்பில் பேசுவதற்கு நம்பகரமான தலைவர் இல்லாத நிலையில் இன்று இலங்கைத் தமிழர்கள் இருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கும் "இந்துஸ்தான் ரைம்ஸ்" பத்திரிகை, இடம்பெயர்ந்த இலட்சக்கணக்கான தமிழர்களின் புனர்வாழ்வு என்பது மறக்கப்பட்டதொன்றாகவே காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.
"நெடுந்தூரம் செல்ல வேண்டிய நிலையில் இலங்கை" எனும் மகுடமிட்டு நேற்று செவ்வாய்க்கிழமை ஆசிரியர் தலையங்கம் தீட்டியிருக்கும் இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகை மேலும் தெரிவித்திருப்பதாவதுயுத்தம் முடிவடைந்துவிட்டது.
ஆனால் இலங்கைத் தமிழர்கள் கடினமான இடத்திற்கும் மிகக்கரடுமுரடான இடத்திற்கும் இடையில் அகப்பட்டுள்ளனர். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வெற்றியானது எந்த வழியில் அமைந்தாலும் தெரிவானது இருவருக்கிடையிலேயே உள்ளது.
அவர்கள் இருவருமே இலங்கைத் தீவின் சிறுபான்மைத் தமிழரின் அன்பை அதிகளவுக்கு இழந்தவர்களாகும். விடுதலைப் புலிகளைத் தனது இராணுவம் நசுக்கியதையடுத்து சர்ச்சைக்கு இடமற்ற வகையில் பலம்வாய்ந்த மனிதராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இப்போது விளங்குகிறார். முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேகாவிடமிருந்து அவர் சவாலை எதிர்நோக்குகிறார்.
ஜெனரல் பொன்சேகாவும் கடும் போக்கு சிங்கள தேசியவாதியாகும். ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கடும்போக்கான ஜெனரல் பொன்சேகா மாற்றியமைப்பாரா என்பதைப் பார்ப்பது கடினமான விடயமாகும். அத்துடன், ராஜபக்ஷ விரும்புவதிலும் பார்க்க அதிகளவுக்கு ஏதாவது அரசியல் இணக்கப்பாட்டைத் தமிழர்களுடன் மேற்கொள்வாரா என்பதைப் பார்ப்பதும் உண்மையில் கடினமான விடயமாகும்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைக் கொல்வதில் வெற்றியடைந்த பின்னர் தமிழர்களின் இரட்சகராக தான் இருப்பாரென ராஜபக்ஷ பகிரங்கமாகப் பிரகடனப்படுத்தியுள்ளார்.
தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தமானது முழுமையாக தாமதப்பட்டதாக வைக்கப்பட்டுள்ளது. சமவுரிமைகள் பற்றி பொன்சேகா வெறுமையாகவே கதைக்கிறார்.
ஆனால், ராஜபக்ஷவிலும் பார்க்க தமிழர்களுக்கு அவர் சிறப்பானவராக ஏதாவது விதத்திலிருப்பாரென்பது தொடர்பான பதிவுகள் எதனையும் அவர் கொண்டிருக்கவில்லை.இராணுவ மோதலானது இலட்சக்கணக்கான தமிழர்களை இடம்பெயர வைத்துள்ளது. அவர்களில் அநேகமானவர்கள் தொடர்ந்தும் முகாம்களில் மோசமான நிலையில் உள்ளனர்.
அவர்களின் புனர்வாழ்வு விடயமானது மறக்கப்பட்டுவிட்டதொன்றாக காணப்படுகிறது.தேர்தலில் யார் வெற்றிபெற்றாலும் செயற்பாட்டுத்திறனுடன் அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரேயொரு சக்தியாக இந்தியா மட்டுமே இருக்குமெனத் தோன்றுகிறது.
ஆனால், இந்த விவகாரத்தில் காதுகேட்காமல் மௌனமாக இருந்துவரும் நிலைப்பாட்டையே புதுடில்லி கடைப்பிடித்துவருகிறது.எவ்வாறாயினும் தமிழர்களின் பிரச்சினை தொலை தூரத்திற்கு அப்பால் விலகிச் சென்று விடும் என்று கருதுவது தொலை நோக்கற்றதாகவே அமையும்.
இந்தியாவுடனான அவர்களின் (தமிழர்களின்) இனரீதியான பிணைப்புகள், அகதிகள் விவகாரம், போராளிப்படைகள் மீள அணி சேர்வது என்பன இலங்கை தொடர்பான எந்தவொரு சொள்கையை வகுப்பதென்றாலும் அதிகளவுக்கு அச்சுறுத்தலான காரணிகளாக அமையும்.
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையில் அகப்பட்டிருந்த இலங்கைத் தமிழர்கள் தமது சார்பாக பேசுதவற்கு நம்பகரமான தலைவர் இல்லை என்பதை இன்று கண்டு கொண்டுள்ளனர். இலங்கையின் உள்விவகாரங்களில் இந்தியா தலையிடுவதை பார்க்கக் கூடாதென்ற போதும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணுமாறு அது வலியுறுத்த முடியும்.
தமிழ் மக்களின் பிரச்சினையால் இந்தியாவும் பாதிக்கப்பட்டிருக்கிறது இந்தியாவுடனான உறவுகளை ராஜபக்ஷவும் பொன்சேகாவும் தனித்தனியான ஒளிவட்டமாகவே வைத்துள்ளனர். தேர்தலுக்குப் பின்னர் தமிழர்கள் தமது சிதறிச்சின்னாபின்னமாகியிருக்கும் வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கு உதவுவதால் இந்தியாவினதும் இலங்கையினதும் வரலாற்றின் மிகுந்த கவலையான அத்தியாயத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு சிறிய அளவிலாயினும் ஊக்கத்துடன் முயற்சிப்பது அவசியமானதாக தோற்றம் பெற்றுள்ளது.http://www.eelamwebsite.com/
0 Kommentare:
Kommentar veröffentlichen