தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கொண்டு சுயேட்சையாக அரச தலைவர் தேர்தலில் போட்டியிடும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தனக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த 7 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உண்டு என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
அரச தலைவர் தேர்தலில் போட்டியிடும் எனக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுகள் உண்டு. நான் விக்கிரமபாகு கருணாரட்ணாவுடன் இணைந்து பிரச்சாரங்களை மேற்கொள்ளவுள்ளேன்.
தெற்கில் நான் தனியாக பிரச்சாரம் மேற்கொண்டால் என்னை தமிழ் இனவாதி என முத்திரை குத்துவார்கள். எனக்கு ஆதரவான தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை தற்போது வெளியிட முடியாது என தெரிவித்துள்ளார்.
சிவாஜிலிங்கம் தேர்தலில் போட்டியிடுவது தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடம் கடும் பிளவை ஏற்படுத்தி உள்ளதாகவும், அமைப்பின் தலைவர் திரு ஆர் சம்பந்தன், மற்றும் மூத்த உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோர் இல்லாத சமயத்தில் சிவாஜிலிங்கம் தனது முடிவை அறிவித்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
தமிழ் தேசிய கூட்டமைப்பு ரெலோ, ஈபிஆர்எல்எஃப், தமிழர் விடுதலைக் கூட்டணி, அனைத்திலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய 22 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ளது.
அவர்களில் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நான்கு கட்சிகளை சேர்ந்தவர்கள் ஏனையவர்கள் சுயேட்சையாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கீழ் போட்டியிட்டவர்கள். தேசிய பட்டடியல் மூலம் தெரிவாகிய ஆர் எம் இமாம் என்னும் மூஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினரும் அதில் அங்கம் வகிக்கின்றார்.
இதனிடையே அரசுடன் இணைந்து இயங்கிவரும் துணை இராணுவக்குழுக்களான சிர்த்தார்த்தன் தலைமையிலான புளொட், டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபி, பிள்ளையான் குழு, கருணா குழு என்பன மகிந்தாவை ஆதரித்து வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
RSS Feed
Twitter



Mittwoch, Dezember 16, 2009
வானதி




0 Kommentare:
Kommentar veröffentlichen