சரணடைய வந்த விடுதலைப்புலிகள் தலைவர்களை சுட்டுக்கொன்றது ஏன்? என்றும், இதற்கு இலங்கை அரசு பதில் சொல்லியாக வேண்டும் என்றும் இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
டெல்லியில் மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து பேசினேன்.
இலங்கையில் உள்ள முகாம்களில் தங்கி இருக்கும் தமிழர்களை அவர்களது சொந்த ஊரில் குடியமர்த்த எடுக்கும் நடவடிக்கை எங்களுக்கு திருப்தியாக இல்லை.
2010இல் நடைபெறும் தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழர்கள் சுதந்திரமாகவும் ஜனநாயக முறையில் வாழவும் நடவடிக்கை எடுப்போம். இலங்கையில் ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்துவோம் என்றும் இலங்கையில் தற்போது அமலில் உள்ள அவசர நிலை பிரகடனத்தை வாபஸ் பெறுவோம் என்றும் ரணில் கூறினார்.
மேலும் பேசிய அவர், இலங்கையில் உள்ள கண்ணி வெடிகளை முழுமையாக அகற்றப்படும் என்று தெரிவித்த ரனில், சரண் அடைய வந்த விடுதலைப்புலிகள் தலைவர்களை சுட்டுக்கொல்லுமாறு ராஜபக்சே சகோதரர் இராணுவத்திற்கு உத்தரவிட்டதாக முன்னாள் தளபதி பொன்சேகா கூறி உள்ளார். இந்த குற்றச்சாற்றுக்கு இலங்கை அரசு உடனடியாக பதில் அளிக்க வேண்டும். இல்லையென்றால் இலங்கை நாடாளுமன்றத்தில் இதுகுறித்து கேள்வி எழுப்பப்படும்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் உண்மையான ஜனநாயக அரசு மலரும் என்றும் இலங்கையில் நடைபெறும் தேர்தலில் முகாம்களில் உள்ள தமிழர்களும் வாக்களிக்க வேண்டும் என்றும் இதற்காக நாங்கள் இலங்கை தேர்தல் ஆணையத்துடன் பேச்சு நடத்தி வருகிறோம் என்றும் கூறினார்.
0 Kommentare:
Kommentar veröffentlichen