Mittwoch, 16. Dezember 2009

யாழில் கடும் மழை: வடமராட்சியில் பல பகுதிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளன


நேற்று முன்தினம் இரவு பெய்த கடும் மழை காரணமாக யாழ்குடாநாட்டில் வடமராட்சி பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புக்கள், வயல்கள், தோட்டங்கள் சேதமடைந்ததுடன் பல இடங்களில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து ஆலயங்களிலும், பாடசாலைகளிலும் தஞ்சமடைந்தள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:



நேற்று முன்தினம் இரவு பெய்த கடும் மழை காரணமாக நூற்றுக்கணக்கான குடியிருப்புக்கள், வயல்கள், தோட்டங்கள் சேதமடைந்ததுடன் பல இடங்களில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து ஆலயங்களிலும், பாடசாலைகளிலும் தஞ்சமடைந்தள்ளனர்.



நேற்று அதிகாலை 2.00 மணியளவில் பெய்த கடும்மழை காரணமாக கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தாழ்வான இடங்களான இரஜகிராமம், மண்டான், அந்தணன்திடல் போன்ற இடங்களில் உள்ள மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.



தொண்டமனாறு கால்வாய் கதவுகள் உடனடியாக திறந்துவிடப்பட்டதனால் பெருமளவான மக்கள் பாதிப்புக்களில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர்.



மேலும் பருத்தித்துறை பிரதேசசபை எல்லைக்கு உட்பட்ட பிரிவுகளான சற்தோடை, இன்பருட்டி, மேலப்புலோலி போன்ற இடங்களும் வெள்ளத்தினால் பாதிப்படைந்துள்ளன.



பதிப்படைந்த மக்களுக்கான உதவிகள் வழங்கப்பட்டுவருவதாகவும், கிராமசேவையாளர்கள் அதில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



தோட்டங்கள் அதிக சேதத்தை சந்தித்துள்ளதுடன், ஆழமான கிணறுகளும் நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றன. மழை தொடர்ந்து பெய்யுமானால் மேலும் அதிக சேதங்கள் ஏற்படலாம் என அஞ்சப்படுகின்றது.
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen