ஜி.எஸ்.பி. பிளஸ் வர்த்தக வரி சலுகை சிறிலங்காவுக்கு இல்லை என ஐரோப்பிய ஒன்றியம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கிறது. தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைகளைப் புரிந்தமைக்காக சிறிலங்காவுக்கு எதிராக மேற்குலகம் எடுதத்திருக்கும் அழுத்தமான முதலாவது நடவடிக்கையாக இதைக் குறிப்பிடலாம்.
ஜி.எஸ்.பி. பிளஸ் எனப்படும் ஏற்றுமதி வர்த்தக வரி சலுகை சிறிலங்காவுக்கு வழங்கப்படமாட்டாது, அது ரத்து செய்யப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக இந்த வரிச்சலுகை வழங்குவது தொடர்பாக விவாதங்கள் நடைபெற்று வந்தன. புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் தாம் நடாத்திய அறவழிப்போராட்டங்கள் பலவற்றிலும், இந்த வரிச்சலுகை சிறிலங்காவுக்கு வழஙகப்படக் கூடாதென வலியுறுத்தி வந்திருந்தனர்.
முதலில் இந்தச் சலுகை குறித்து தமக்கு அக்கறையில்லை என்பது போல போக்குக் காட்டிய சிறிலங்கா அரசு, பின்னர் இதனைப் பெற்றுக் கொள்ள பல இரகசிய அனுகுமுறைகளை மேற்கொண்டிருதது. இந்த வரிச் சலுகை சிறிலங்காவுக்கு வழங்கப்பட வேண்டும் என மதகுருமார்கள் அடங்கிய குழுவொன்றினை, ஐரோப்பாவிற்கு அகனு்பி, பல தலைவர்களையும் சந்தித்து இந்த வரிச் சலுகையை வழங்குமாறு பிரச்சாரம் செய்தது. ஆயினும் நீண்ட விவாதங்களுக்குப் பிறகு, ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்காவுக்கு, இந்த வரிச்சலுகை வழங்கப்படமாட்டாது என , தனது முடிவை அறிவித்திருக்கிறது.
0 Kommentare:
Kommentar veröffentlichen