Donnerstag, 17. Dezember 2009

ஸ்பெயின்,போர்த்துக்கல்,மொரோக்கோவை பூகம்பம் தாக்கியது


ஐரோப்பிய நாடுகளான போர்த்துக்கல்,ஸ்பெயின் ஆகியவற்றையும் ஆப்பிரிக்க நாடான மொரோக்கோவையும் இன்று அதிகாலை 0137 GMT க்கு கடுமையான பூகம்பம் ஒன்று தாக்கியிருக்கிறது. 6.3 ரிட்சர் ஸ்கேல் புவியதிர்வு அளவுகோலில் பதிவாகியுள்ள இப்பூகம்பம் காரணமாக விளைந்த சேதம் பற்றிய விபரங்கள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.


அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயற்படும் புவியியல் ஆய்வு மையமான USGS இப்பூமியதிர்வு கடலுக்குக் கீழ் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாகக் கூறியுள்ளது. இதேவேளை ஸ்பெயினின் மீடியா நிறுவனம் ஒன்று தகவல் அளிக்கையில் ஸ்பெயினின் செவில்லி, கொர்டோபா மற்றும் ஹியூவெல்வா ஆகிய நகரங்களில் இப்பூகம்பம் உணரப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.



தெற்கு போர்ச்சுகல்லின் கேப் செயின்ட் வின்சென்ட் பகுதியிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில், அட்லான்டிக் கடலில் இப்பூகம்பம் ஏற்பட்டிருக்கிறது.
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen