கோபன்ஹேகனில் காலநிலை குறித்த மாநாட்டு மண்டபத்தில் நுழைய முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது டானிஷ் பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம் செய்தனர்.
மாநாடு நடந்த இடத்துக்கு அருகில் உள்ள தடைகளை உடைத்துக்கொண்டு வருவதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் முயன்றபோது பெரும் இழுபறி ஏற்பட்டது. அதன் காரணமாக அந்தக் கட்டிடம் ஒரு மணிநேரம் வரை மூடப்படும் நிலை உருவானது.
'காலநிலைக்கான நீதி' என்ற பெயரில் வறிய நாடுகளுக்கு அதிக பணம் வழங்கப்பட வேண்டும் என்று கோரி டெனிஷ் தலைநகரில் பல ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
அமைச்சர் கோனி பதவி விலகினார்
கோபன்ஹேகனில் நடைபெறும் பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் உடன்பாடு ஒன்றைக் காண்தற்கான காலக்கெடு நெருங்கும் நிலையில், இந்த மாநாட்டுக்குப் பொறுப்பான, அமைச்சர் கோனி ஹெடெகார்ட் பதவி விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக டென்மார்க் பிரதமர் லார்ஸ் லொக் ரஸ்முசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோபன்ஹேகனுக்கு 120 நாடுகளின் தலைவர்கள் ஏற்கனவே வந்தடைந்தோ அல்லது வந்துகொண்டோ இருக்கும் நிலையில், ஒரு உடன்பாட்டை எட்ட மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு மேலும் மூத்த நபர் ஒருவர் தலைமை தாங்குவது பொருத்தமானதாக இருக்கும் என்று டென்மார்க் அரசு கூறியுள்ளது.
ஆயினும் இந்த நடவடிக்கை மாநாட்டுப்பிரதிநிதிகள் சிலரை கோபமுறச்செய்துள்ளது. இது குறித்துத் தங்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இருநூறுக்கும் அதிகமானோர் தடுத்து வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
RSS Feed
Twitter



Donnerstag, Dezember 17, 2009
வானதி




0 Kommentare:
Kommentar veröffentlichen