Sonntag, 13. Dezember 2009

மஹிந்தவுக்கு ஆதரவு குறித்து தீர்மானம் எடுக்கவில்லை - பிள்ளையான்


வரும் ஜனாதிபதி தேர்தலில், தமிழர் அபிலாஷைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் தரப்பிற்கு ஆதரவளிக்கப்படும் என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கே ஆதரவளிக்கபோவதாகவும், அவர் பொன்சேகவை விட அவர் மிகவும் நல்லவர் எனவும் தெரிவித்து வந்த பிள்ளையான், திடீரென இப்படி தெரிவித்திருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாக, கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன.



நேற்றிரவு ஆங்கில வார பத்திரிகை ஒன்றுக்கு அளித்த செவ்வியில், ஆளும் கட்சிக்கு ஆதரவளிப்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை. எனவும், இன்னமும் தமிழ் பிரச்சினைகள் தீர்க்கப்படாத நிலையில் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



மேலும், மேலதிக அதிகாரங்கள் தேவையில்லை என தாம் அண்மையில் குறிப்பிட்ட போதிலும், அரசியல் செயற்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாலும், மாகாண சபைகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதே தமது கட்சியின் நிலைப்பாடு எனவும் தெரிவித்திருக்கிறார்.



சிலவேளைகளில், மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்குவதாக கூறிய ஆதரவினை மீளப்பெறுவதற்கும், எதிர்கட்சிகளுடன் பேரம் பேசுவதற்குமாக இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருக்கலாம் என ஊகங்கள் எழுந்துள்ளன.
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen