இலங்கையின் கிழக்கு மாகாணம், பொத்துவில் பிரதேசத்தில், அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் குழுவினருக்கும், கிழக்குமாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் குழுவினருக்குமிடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது.
இம் மோதல் சம்பவத்தின் போது, மூவர் படுகாயமடைந்தும், மூவர் காணமல்போயும் உள்ளளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொத்துவில் பிரதேசத்தில் உள்ள சிறிலங்கா சுதந்திர கட்சி அலுவலகத்துக்கு முன்பாக இன்று பிற்பகலில் இம் மோதல் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக இரு குழுக்களும் பரஸ்பரம் எதிர் தரப்பினரைக் குற்றம் சாட்டிய வண்ணம் உள்ளதாகவும், காணமற்போன மூவரும் சந்திரகாந்தன் குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களை அமைச்சர் முரளிதரனின் ஆட்களே கடத்தியதாகவும், அவரைத் தேடிச் சென்ற ஜீப் வண்டி எரிக்கப்பட்டுள்ளதாகவும், ஜீப்பின் சாரதிக்கு என்ன நடந்தத எனத் தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து காவல் துறையிடம் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும், காவற்துறையினர் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் அறியப்படுகிறது.
0 Kommentare:
Kommentar veröffentlichen